Kathir News
Begin typing your search above and press return to search.

எதிர்ப்பு (புரோட்டஸ்டன்ட்) மிஷனரிகள் வரலாறும்! இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமும்! - மிஷன் காளி இயக்கம்.!

எதிர்ப்பு (புரோட்டஸ்டன்ட்) மிஷனரிகள் வரலாறும்! இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமும்! - மிஷன் காளி இயக்கம்.!

எதிர்ப்பு (புரோட்டஸ்டன்ட்) மிஷனரிகள் வரலாறும்! இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமும்! - மிஷன் காளி இயக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 9:35 AM GMT

கருப்பர் கூட்டம் பிரச்சினையிலே நாம் செய்ய தவறியது இந்து மதம் வேறு தமிழர் மதம் வேறு எனும் வெறுப்பு பரப்புரையை பேசாமல் விட்டது தான். அது இன்றைக்கு ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் யார் இந்து? இந்துவுக்கு என்ன புனிதம் இருக்கிறது? என்ன புத்தகம் இருக்கிறது? என கேட்பதிலே வந்து நிற்கிறது.

இதிலே இன்னமும் நாம் இந்து மதம் என்பதை ஒழிக்க நினைக்கிறார்கள் என்றே உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறோம் அல்லது இந்து மதம் என்பதை பாப்பானியம் என சொல்கிறார்கள் என்கிறோம். அதற்கு அந்த திருட்டு கும்பல் என்ன சொல்கிறது? கோவில் கட்டினோம், எங்களீலும் இந்துக்கள் இருக்கிறார்கள். அது உண்மை தான் எனவே நம்முடைய உணர்ச்சிவசப்பட்ட வாதம் பெரும்பாலான நடுநிலை இந்துக்களிடம் அடிபட்டு போகிறது.

ஆனால் அந்த திருட்டு கும்பல் என்ன செய்கிறது? இந்து மதத்தை எதிர்ப்பு இந்துமதமாக எப்படி கிறிஸ்துவத்திலே இருந்ததோ அப்படி. இதை புரிந்துகொள்ளவேண்டும். ஐரோப்பாவிலே கத்தோலிக்க சர்ச் ஐ எதிர்த்து தோன்றிய எதிர்ப்பு கிறிஸ்துவம் , போப் எனும் தனிப்பட்ட மத தலைவரிடம் இருந்த அதிகாரம் அந்தந்த ஐரோப்பிய நாடுகளின் மன்னர்களே அவர்கள் நாடுகளீலே தனியே சர்ச் ஆரம்பித்து அவர்களே மத தலைவராகவும் இருக்க வழி செய்தது.

அதற்கு முன்னர் ஐரோப்பிய மன்னர்கள் ரோம் நகரத்திற்கு போய் வாட்டிகனிலே போப் இடம் அங்கீகாரம் கோரிப்பெறவேண்டும். போப் சொல்வதை கேட்காவிடில் கிறிஸ்துவத்திலே இருந்து வெளியேற்றப்படுவார்கள் என இருந்தது. எனவே போப் சொல்வதை கேட்டு படைகள் அனுப்பு ஏன் யாரை திருமணம் செய்யவேண்டும் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும் என எல்லாத்தையும் கேட்கவேண்டும்.

பிரிட்டனிலே அப்போது அரசனாக இருந்த எட்டாம் ஹென்றிக்கு விவாகரத்து தரவில்லை என தனியே சர்ச் ஆப் ஆங்கிலிகன் எனும் ஒரு சர்ச் ஐ ஆரம்பித்து தன்னையே அதன் தலைவராக அறிவித்துக்கொண்டான். பிறகு எல்லா மத ஆட்களும் அரசனுக்கு விசுவாசி என உறுதிமொழி எடுக்கவேண்டும் சர்ச் ஆப் ஆங்லிகன் ஆட்கள் தான் பதவிக்கு வரமுடியும் அரசனாக ஆக முடியும் என செய்தார்கள்.

ஒரு முறை அரசன் இறந்தபோது அவனின் 13 ஆம் தூரத்து உறவினனை கூட்டிவந்து அரசனாக்கினார்கள் ஏன்னா மற்ற எல்லோரும் கத்தோலிக்கர்கள். அவர் தான் எதிர்ப்பு கிறிஸ்துவத்தை சேர்ந்தவர். இன்றைக்கும் வட அயர்லாந்திலே கத்தோலிக்கர்களூக்கும் எதிர்ப்பு கிறிஸ்த்துவர்களுக்கும் நடக்கும் சண்டை உயிர்ப்பலி கொள்கிறது. எதிர்ப்பு கிறிஸ்துவர்களான ஆங்கிலேயர்கள் அதே முறையை இங்கே பின்பற்றி, எதிர்ப்பு இந்து மதம், எதிர்ப்பு புத்தமதம் என்றெல்லாம் கொண்டுவந்தார்கள். ஆரிய சமாஜம் , பவுத்த பிக்குகள் என கொண்டுவந்தார்கள்.

ஆரிய பார்ப்பான் எதிர்ப்பு என்பதே பார்ப்பான்கள் தான் கத்தோலிக்கர்கள் எனவே எதிர்ப்பு இந்துமதம் அவர்களை எதிர்த்து போராடி மத அதிகாரத்தை எதிர்ப்பு கிறீஸ்துவம் என ஒன்றை ஆரம்பித்து கைப்பற்றவேண்டும் என்பதே இங்கே இங்கிலாந்து கிறிஸ்துவர்கள் செய்தது. அதனால் அவர்களுக்கு என்ன லாபமா? அரசியல் அதிகாரத்தையும் மத அதிகாரத்தையும் ஒன்றாக்கினால் கோவில்கள் ஆளுவோர் கைக்குள்ளே வரும் அதைக்கொண்டு அப்படியே ஆளலாம் மதம் மாற்றலாம் என எவ்வளவு நன்மைகள்?

இதனால் தான் கோவில்களை அரசே நடத்தும் எனும் நாடகம். நம்முடைய வரலாற்றிலே எங்கேனும் அரசரே கோவில் தலைவராகவோ அல்லது சாஸ்திர சபைக்கு தலைவராகவோ இருந்தது உண்டா? கோவில்கள் அரசரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடந்தது என உண்டா? திருமலை நாயக்கர் திருவரங்கம் திருவரங்கனை பார்க்க வந்தபோது கோவில் திருவிழா நடந்து முடிந்துகொண்டிருந்தது. திரும்பவும் அதை நடத்தவேண்டும் என சொன்னபோது இல்லை இனி இது அடுத்தவருடம் தான் என சொன்னார்கள். அதே போல அடுத்தவருடம் வரை தங்கியிருந்து தரிசனம் செய்து போனார்.

ஆனால் ஐரோப்பாவிலே அப்படி இல்லை. இஷ்டத்துக்கு வளைப்பார்கள். அரச குடும்பத்துக்கு என தனி சர்ச், அவர்களுக்கு என தனி ஆட்கள், தனி வழிபாடு, பொது இடமாக இருந்தால் கூட அரச குடும்பத்தினர், மேல் தட்டு ஆட்கள் அமர்வதற்கு என தனி இடம் என ஓக்கோ என வாழ்ந்தவர்கள். அதைத்தான் இங்கே ஸ்பெஷல் தரிசனம், விஐபி தரிசனம் என்றெல்லாம் காப்பியடித்து ஆக்கிவைத்திருக்கிறார்கள். இங்கே அரசனாயினும் ஆண்டியாயினும் இறைவன் முன்னால் நின்று தான் ஆகவேண்டும் என்பதை எல்லாம் ஏற்கமுடியவில்லை.

அதை மாற்றி ஆண்டான் அடிமை, அரச குடும்பம் என கொண்டு வந்த பிரச்சினை ஆரிய பார்ப்பானிய எதிர்ப்பு, தமிழர் மதம் எனும் கூச்சல், இந்துக்களூக்கு புனித நூல் இருக்கிறதா எனும் கிண்டல் எல்லாம். ஏன் ஒரே ஒரு புனித நூல் இருக்கவேண்டும்? அதை ஒரே மாதிரி எல்லோரும் ஏன் படிக்கவேண்டும்? நாங்கள் குடும்பிடும் சிவனும் முருகனும் அம்மனும் கண்ணனும் கருப்பராயனும் முனியாண்டியும் கூப்பிடும் போது வந்து என்ன வேண்டும் என கேட்டால் சொல்லிவிட்டு போகிறார்கள். அவர்களே இருக்கும் போது தனியே பொஸ்தவம் எதுக்கு? இப்படி இருப்பதை ஒழித்து அழித்து

இதான் பொஸ்தவம் இதிலே இருக்கும்படி தான் நடந்துகொள்ளவேண்டும். அதிலே என்ன சொல்லீயிருக்கிறது என்பதை நாங்கள் புளி போட்டு விளக்குவோம் என சொல்வது தான் இன்றைய திராவிட்டு திருட்டு கும்பலின் யார் இந்து எனும் கேள்வி. இந்து எப்படி இருக்கவேண்டும் எப்படி வழிபாடு செய்யவேண்டும் யாருக்கு பணம் கொடுக்கவேண்டும் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என சொல்லுவார்கள் அதன்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது தான் ஒரே பொஸ்தவம் இல்லை எனும் கிண்டல்.

இதை புரிந்து கொள்ளவேண்டும்.

யார் இந்து எனும் கேள்வி ஏன் எழுகிறது?

இந்துக்களாகிய நாம் ஒரு கட்டுக்குள்ளே வரமாட்டோம் என சொல்கிறோம்.

இந்துக்களாகிய நாம் சுயமாக சிந்திக்கிறோம் என சொல்கிறோம்.

இந்துக்களாகிய நாம் கடவுளிடம் நேரடியாக பேசுகிறோம் என சொல்கிறோம்.

இந்துக்களாகிய நாம் கடவுளை விரும்பிய வடிவிலே கும்பிடுவோம் என சொல்கிறோம்.

இந்துக்களாகிய நாம் மத தலைவர் ஒருவரின் பேச்சை கேட்கமாட்டோம் என சொல்கிறோம்.

இது தான் அவர்களுக்கு எரிகிறது. மற்ற மதங்கள் போல மத தலைவர்களிடம் டீல் போட்டு ஓட்டு வாங்குவது இங்கே நடப்பதில்லை. மற்ற மதங்களிலே ஆளுவோரை கவனித்துவிட்டால் போதும் என்னவேண்டுமானலும் செய்யலாம் ஓட்டு உறுதி.

இங்கே???

காசில்லாத ஒருத்தன் ஒரு போர்டு, நாலு பென்சில், ஒரு வீடியோ போட்டு அடித்தளத்தையே ஆட்டம் காண வைக்கிறான்னா அதை எப்படி சகிப்பது?

அப்போ என்ன சொல்லனும்?

இப்போ இருக்கிறது எல்லாம் பாப்பானோடது. அதை எதிர்க்கனும்.

உனக்கு கடவுள் வேணுமின்னா நான் சொல்றமாதிரி கேளு.

என உருட்டனும். அதைத்தான் இந்த 2ஜி புகழ் ஆஆ ராசா செய்துகொண்டிருக்கிறார். அதைத்தான் இப்போது ஈவேராமாசாமா நாயக்கரும் இந்துக்களுக்கு கோவில் நுழைவு உரிமை பெற்றுத்தந்தார் , இந்துக்களுக்கு இடஒதுக்கீடு வாங்கி கொடுத்தார் என உருட்டும் ஆட்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதற்கு நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்? அதை எப்படி மக்களிடம் சொல்லப்போகிறோம்? என்பதை பொருத்துத்தான் 2021 முடிவுகள் இருக்கும்.

சும்மா இந்துக்கள் சுரணயற்றவர்கள் என பேசி பலனில்லை. நாம் அவர்களிடம் பேச அவர்களுக்கு புரியவைக்க என்ன செய்தோம்?

-ராஜாசங்கர் விஸ்வநாதன்

#காளிஇயக்கம்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News