தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கொரனா பரவல் காரணமாக ஒத்திவைப்பு.!
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கொரனா பரவல் காரணமாக ஒத்திவைப்பு.!

ஐந்தாம் ஆண்டு தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (TNPL) கொரோனா தொற்றுநோய் காரணமாக இரண்டாவது முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் T20 இந்த ஆண்டு நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச்சில் நடத்தப்படும் என்று TNCA எதிர்பார்க்கின்றது.
புகழ்பெற்ற T20 லீக் ஆரம்பத்தில் ஜூன் 10 முதல் ஜூலை 20 வரை நடத்த முடிவு செய்தநிலையில் மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்ததன் காரணமாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் மே மாதத்தில் அந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.
ஜூலை இறுதியில் அல்லது செப்டம்பரில் இப்போட்டி நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இருக்கும் நிலையில் TNCA போட்டியை நடத்தக்கூடிய சூழ்நிலையில் இல்லை.
"ஐந்தாம் ஆண்டு TNPL போட்டியை ஜூலை /ஆகஸ்ட் முதல் செப்டம்பர் இறுதி வரை TNCA நடத்த முடிவு செய்திருந்தது. தற்போதிருக்கும் கொரோனா காலகட்டத்தில் TNCA அப்போட்டியை நடத்தும் முடிவில் இல்லையென்று," TNCA செயலாளர் R S ராமசாமி பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"ஐந்தாம் ஆண்டு போட்டியை நவம்பர் 2020 அல்லது மார்ச் 2021யில் நடத்தச் சாத்தியக்கூறுகளை ஆராய்கிறோம்."
தமிழ்நாட்டின் சிறந்த வீரர்களான R அஷ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், M விஜய் மற்றும் பலர் TNPL இல் பங்கேற்கின்றனர், IPL குழுவால் கண்டறியப்பட்ட இளம் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் R சாய் கிஷோர் ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ்நாட்டில் இதுவரை 2.4 லட்சம் பேர் கொரோனா நோயால் பாதிப்படைந்துள்ளனர், 3935 பேர் இறந்துள்ளனர்.
source: https://www.deccanherald.com/sports/cricket/tamil-nadu-premier-league-postponed-again-may-be-held-in-november-or-march-2021-868359.html