Kathir News
Begin typing your search above and press return to search.

அகமதாபாத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு லட்சம் நிவாரண உதவி - பிரதமர் மோடி அறிவிப்பு.!

அகமதாபாத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு லட்சம் நிவாரண உதவி - பிரதமர் மோடி அறிவிப்பு.!

அகமதாபாத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்  குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு லட்சம் நிவாரண உதவி - பிரதமர் மோடி அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 5:48 AM GMT

அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எட்டு நோயாளிகள் பலியாகியுள்ளனர். இந்த தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமாதாபாத்தின் நவரங்க்பூர் பகுதியில் இருக்கும் ஷ்ரே மருத்துவமனையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலையில் அந்த மருத்துவமனையின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் மருத்துவமனையில் இருந்த எட்டு நோயாளிகள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

இதன் பின்பு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், 35க்கும் மேற்பட்ட நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

இந்த சம்பவத்தை பற்றி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டது: அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைவார்கள்.



குஜராத் முதலமைச்சர் விஜயரூபானி மற்றும் மேயரிடம் மீட்பு வேலைகளை பற்றி பேசி உள்ளேன். இந்த தீ விபத்தால் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி கொடுக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/narendramodi/status/1291206650930421760

Next Story
கதிர் தொகுப்பு
Trending News