மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு.!
மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு.!

By : Kathir Webdesk
மழைக்காலங்கள் தொடங்கிவிட்டாலே அதிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டாலே மழை அதிகமாக பெய்யும். அவ்வாறு வீணாக போகும் மழைநீரை நாம் சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் மற்றும் நீரின் தரமும் மேம்படும். மழை நீரை நாம் சேமிக்க இன்று எடுக்கும் ஒரு சிறு முயற்சியானது பிற்காலத்தில் மனித குலத்தை காக்கும். அதற்கு நம்முடைய நாம் செய்யவேண்டிய செயல்கள் என்ன? மழைநீர் சேகரிப்பு கட்டிடங்களை உருவாக்கி மழை நீரை சேமிக்க வேண்டும். கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து வடியும் மழை நீரை கீழ் பகுதிக்கு கொண்டு வந்து வடிநீர் குழாய்கள் மூலம் அதை இணைக்க வேண்டும்.
இவ்வாறு வடிநீர் குழாய்க்கு வரும் தண்ணீரை கட்டிடங்களின் அடிப்பகுதியில் ஆழத்துக்கு கசிவு நீர் தொட்டி செங்கல் கொண்டு அமைக்கப்பட வேண்டும். அதன் அதன்பின் கூலாங்கற்கள் அல்லது ஜல்லிகை கொண்டு ஒரு மீட்டர் ஆழத்திற்கு நிரப்பவேண்டும். மாடியில் இருந்து வரும் மழைநீரை வடிகுழாய் மூலம் கழிவுநீர் தொட்டி மேற்பரப்பில் விழுமாறு செய்ய வேண்டும். இவ்வாறு நீர் தொட்டி அமைப்பது மழை நீரை நேரடியாக பூமிக்குள் ஊர செய்யலாம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயரும். கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மண் சார்ந்த பகுதியாக இருந்தால் மிகவும் பாதுகாப்பான முறையில் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க வேண்டும்.
இதுவரை நீங்கள் மழை நீர் சேமிப்பு தொட்டி உங்கள் கட்டிடங்களில் அமைக்காமல் இருந்தால், தாமதமின்றி அதை உருவாக்கி மழைநீரை சேமித்து நீர் வளத்தை பெருக்கலாம். ஏற்கனவே மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு இருந்தால் மேற்கூறியபடி முறையாக பராமரிக்க வேண்டும்.
