உயர் அதிகாரி டார்ச்சர்.. தர்மபுரியில் கோமாரி நோய் தடுப்பூசி பணியை நிறுத்திய கால்நடை மருத்துவர்கள்.!
உயர் அதிகாரி டார்ச்சர்.. தர்மபுரியில் கோமாரி நோய் தடுப்பூசி பணியை நிறுத்திய கால்நடை மருத்துவர்கள்.!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்களுக்கு கால்நடை துறையில் உள்ள உயர் அதிகாரிகள் தொல்லை தருவதால் மன அழுத்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இது வரை 17 சுற்றுகள் கோமாரி நோய் தடுப்பூசி பணியில் ஆள் பற்றாக்குறை நிலவிய போதும் கால்நடை உதவி மருத்துவர்களால் சிறப்பாகவே செயல்படுத்தப்பட்டது.
தற்போது மத்திய அரசு புதிய ஆணை பிறப்பிக்பட்டுள்ளதாகவும், மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடுவதோடு அந்த மாடுகளுக்கு காதில் கடுக்கன் போடவும், மாடுகளின் மொத்த விபரங்களோடு அதன் உரிமையாளரின் மொத்த விபரங்களையும் பெற்று இணையத்தில் பதிவு செய்யவேண்டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் வழிகாட்டுதலில் எந்த இடத்திலும் இந்தப் பணிகள் அனைத்தையும் கால்நடை மருத்துவர்கள்தான் செய்யவேண்டும் என்று சொல்லப்படவில்லை.
ஆனால் உயர் அதிகாரிகள் கால்நடை மருத்துவப் படிப்பிற்கு சிறிதும் பொருத்தமில்லாத இது போன்ற பணிகளைச் செய்யச் சொல்வதால் மருத்துவர்கள் மிகுந்த மன வேதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசு புதியதாக கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு, கால்நடை உயர் அதிகாரிகள் கால்நடை மருத்துவர்களுக்கு தொல்லை கொடுப்பது நியாயம் அல்ல.
மேலும், மாடுகளுக்கு கடுக்கன் போடுவதால் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன என்பது குறித்து விழிப்புணர்வு அல்லது பரப்புரைகள் இதுவரை எந்த அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்யப்படவில்லை.
வருடத்துக்கு சராசரியாக 20 முதல் 25 விழுக்காடு கால்நடைகள் கழிதலும், புதிய கால்நடைகள் வருதலும் இருக்கும்.
இது போக சந்தை, மேய்ச்சல் என இடம்மாறும் கால்நடைகள் இருக்கும்பட்சத்தில் அதற்கான தனிப்பிரிவு எதுவும் ஏற்படுத்தாமல் கால்நடை மருத்துவர்களே எல்லாவற்றையும் மேற்கொள்ளவேண்டும் என நினைப்பது அறிவியலுக்கும் மனித உரிமைக்கும் புறம்பானது.
எனவே கால்நடை மருத்துவ பேரவையானது உடனடியாக தலையிட்டு கால்நடை மருத்துவ படிப்பிற்குரிய தகுதியை குறைக்கும் செயல்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.