Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க எம்.பி! கொதித்தெழுந்தனர் இந்தியர்கள்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்!!

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க எம்.பி! கொதித்தெழுந்தனர் இந்தியர்கள்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்!!

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க எம்.பி! கொதித்தெழுந்தனர் இந்தியர்கள்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Aug 2019 12:45 PM IST

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு இருந்த சிறப்புச் சலுகைகளைமத்திய அரசு ரத்து செய்தது. மாநிலத்தை இரு பிரிவாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன்பிரதேசமாகவும், லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.


இதற்கான மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.



இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுடானான நல்லெண்ண நடவடிக்கைகளை துண்டித்து வருகிறது.



காஷ்மீர் விவகாரத்தில் பல்வேறு நாடுகளிடமும் பாகிஸ்தான் ஆதரவு கோரி வருகிறது. எனினும் ஐ.நா. சபை, அமெரிக்கா,ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளித்தன.


காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்தஎம்.பி., டாம் சியோஸி அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.



அந்த கடிதத்தில், “காஷ்மீர் விஷயத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மோசமான விளைவுகள ஏற்படுத்தும்.பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறி அப்பாவி மக்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்துள்ளது. அங்குதொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. எனவே, இந்தியாவின் நடவடிக்கையை அமெரிக்கா கண்டிக்கவேண்டும்’’ என கூறி இருந்தார்.



டாம் எழுதிய கடிதத்துக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்குஎதிரான நிலைப்பாட்டை எடுத்த டாம் சியோஸியை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் அறிக்கைகள் வெளியிட்டதுடன்,சமூக வலைதளங்களிலும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.



டாம் சியோஸி வெற்றி பெற்ற, நியூயார்க் டிவிஷன் 3 தொகுதியில் கணிசமான அளவு இந்தியர்கள் வசிக்கின்றனர். கடந்ததேர்தலில் அவர்கள் டாம் சியோஸிக்கு வாக்களித்து இருந்தனர். இதனால் வருகிற தேர்தலில் இந்தியர்களின் ஓட்டுகளை மொத்தமாக இழக்க நேரிடும் என்பதை உணர்ந்த டாம் சியோஸி, இந்தியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு வேட்டார்.


.


இதுதொடர்பாக அவர் கூறும்போது, “காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் கலந்து பேசாமல் தனிச்சையாகநான் கடிதம் எழுதியது தவறு. இதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். இந்த விவகாரத்தில் எனது எண்ணத்தைவெளிப்படுத்தவே கடிதம் எழுதினேன். அவ்வாறு கடிதம் எழுதும் முன்பாக அமெரிக்க வாழ் இந்தியர்களின் கருத்தைகேட்டிருந்தால் இதுபோன்ற சூழல் ஏற்பட்டிருக்காது” என்று கூறிள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News