Kathir News
Begin typing your search above and press return to search.

தோல்வியையே கண்ணில் பார்க்காத வீரராஜேந்திர சோழன் - உடல் முழுதும் மறம் ஊறிப்போன மாமன்னன்.!

தோல்வியையே கண்ணில் பார்க்காத வீரராஜேந்திர சோழன் - உடல் முழுதும் மறம் ஊறிப்போன மாமன்னன்.!

தோல்வியையே கண்ணில் பார்க்காத வீரராஜேந்திர சோழன் - உடல் முழுதும் மறம் ஊறிப்போன மாமன்னன்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Aug 2019 4:24 PM GMT


இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவர் வீரராஜேந்திர சோழன் (கி.பி 1063 - 1070). இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி. இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திரன், தந்தைக்கு முன்னரே இறந்து விட்டதால், வீரராஜேந்திரன் அரசனாக்கப்பட்டார்.


இவர் பதவியேற்ற உடனே சோழர்களின் பரம்பரை எதிரிகளான சாளுக்கியருடன் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கீழைச் சாளுக்கியப் பகுதியான வேங்கி மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், பாண்டி நாட்டிலும், ஈழத்திலும் சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.


வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. இரண்டு முறை சாளுக்கிய மன்னனை தோற்கடித்ததால், சாளுக்கிய மன்னன் தற்கொலை செய்துகொண்ட வரலாறும் உண்டு.


கூடல் சங்கமத்தில் இருந்து கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரான வெங்கிக்குச் சென்ற வீரராஜேந்திரனின் படைகள் அங்கே சோழர் ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை முறியடித்தன. இப் போரில் வீரராஜேந்திரன், ஜனநாதன் என்பவன் தலைமையிலான மேலைச் சாளுக்கியப் படைகளைக் கிருஷ்ணா நதிக் கரையில் முறியடித்தான். வெங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கீழைச் சாளுக்கியர் பகுதி முழுவதையும் வீரராஜேந்திரன் அடிப்படுத்தினான். விஜயாதித்தன் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசனை வெங்கியில் மன்னனாக்கினான். வடபகுதிப் போர்களில் கலிங்க நாடு, மேலைச் சாளுக்கியருக்கு உதவியாக இருந்தது. இதனால் கலிங்கத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான்.


இலங்கைப் போர்:


சோழரின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைத் தீவின் தென் பகுதியில் தன்னை உறுதிப்படுத்தி வந்த விஜயபாகு என்ன்னும் சிங்கள அரசன், சோழர்களை இலங்கையில் இருந்து துரத்த எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். வீரராஜேந்திரன் இவனை அடக்குவதற்காக இலங்கையில் இருந்த சோழர் படைகளை இலங்கையின் தென்பகுதியான உறுகுணைப் பகுதிக்கு அனுப்பினான். விஜயபாகுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பர்மாவின் அரசன் அவனுக்குத் துணையாகக் கப்பல்களையும் படைகளையும் அனுப்பினான். இவற்றின் துணையுடன் இலங்கையின் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளர்ச்சிகளை உருவாக்குவதில் விஜயபாகு வெற்றி பெற்றான். இலங்கையில் ஏற்கெனவேயிருந்த சோழர் படைகளுக்குத் துணையாகச் சோழநாட்டிலிருந்தும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் வீரபாண்டியன் கிளர்ச்சிகளை அடக்கினான் எனினும், உருகுணைப் பகுதியில் தனது பலத்தை, விஜயபாகு மேலும் அதிகரித்துக் கொண்டான். விஜயபாகுவின் நடவடிக்கைகள் பின் வந்த ஆண்டுகளிலும் தொடர்ந்தது.


கடாரப் படையெடுப்பு:


வீரராஜேந்திரனின் ஏழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்று, அவன், அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கடாரத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டதாகவும், அதனை அம்மன்னனுக்குக் கையளித்ததாகவும் கூறுகின்றது. வீரராஜேந்திரன் கி.பி 1070 ஆம் ஆண்டில் காலமானார். வீரராஜேந்திரனின் இறப்பைத் தொடர்ந்து இவர்களில் ஒருவன் அதிராஜேந்திரன் என்னும் பெயருடன் அரசனானான். தனது வாழ்நாளில் தோல்வியையே சந்தித்திராத சோழ மன்னன் என்ற பெயரெடுத்த வீரராஜேந்திரன் தீவிர நடராஜபெருமான் பக்தராவார். வைரம் பதித்த ஆபரணத்தை நடராஜ பெருமானுக்கு பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News