உலக பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பு.!
உலக பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பு.!
By : Kathir Webdesk
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கையினால் வெளிநாட்டு நேரடி முதலீடும், அந்நிய செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளன. 2014-15-ஆம் ஆண்டில் 44.3 பில்லியன் டாலராக இருந்த உள்நாட்டு நேரடி முதலீடு 2018-19-ல் 62 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
2018-19- ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- ஜூலை மாத காலாண்டில் 21.1 பில்லியன் டாலராக இருந்த வெளிநாட்டு நேரடி முதலீடு இந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 27.3 பில்லியன் டாலராக இருந்தது. ஏப்ரல் 17 அன்று 375 பில்லியன் டாலராக இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 19 அன்று 429 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
தொழில்துறை மீதான நடவடிக்கை குறைப்பு:
தொழில்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையின் கடுமை குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு வரி செலுத்துவோரின் சிறுசிறு நடைமுறைத் தவறுகளுக்காக அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட மாட்டாது. 25 லட்சத்திற்கும் குறைவான தவறுகள் காணும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்கு தொடர சிசிஐடி/டிஜிஐடி அந்தஸ்திலான இரண்டு அதிகாரிகள் கொலிஜியத்தின் முன் அனுமதி பெற்றால் மட்டுமே வழக்கு தொடரப்படும்.