Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பாரம்பரிய முறையில் ஒரு பசுமை வரவேற்பு: மாவிலை தோரணங்களுடன் வரவேற்கும் பனை ஓலை வளைவுகள்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பாரம்பரிய முறையில் ஒரு பசுமை வரவேற்பு: மாவிலை தோரணங்களுடன் வரவேற்கும் பனை ஓலை வளைவுகள்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பாரம்பரிய முறையில் ஒரு பசுமை வரவேற்பு: மாவிலை தோரணங்களுடன் வரவேற்கும் பனை ஓலை வளைவுகள்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Oct 2019 3:13 AM GMT


பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சென்னை விமான நிலையத்திலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழி நெடுகிலும் மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரவேற்பை ஒரு பசுமை சார்ந்த வரவேற்பு என்று கூறலாம்.


வண்ண வண்ண காகிதங்கள், பிளாஸ்டிக்குகளுக்கு பதிலாக வழி நெடுகிலும் பாரம்பரிய முறையில் மாவிலை, வாழை, கரும்புகள், பனை ஓலையில் அலங்கரிக்கப்பட்ட வளைவுகள் என பார்ப்பதற்கு பாரம்பரிய வரவேற்பு முறையில் விழாக்கோலம் கொண்டுள்ளது கிழக்கு கடற்கரை சாலை.


இந்த வகையில் சென்னையும், மாமல்லபுரமும் இதுவரை எப்போதும் காணாத வகையில் அழகுற, பொலிவுற காணப்படுகின்றன. எங்கும் சுத்தம்..எதிலும் சுத்தம் என்பதுபோல மாமல்லபுரம் நகர் மட்டுமல்ல, சுற்றுலா இடங்கள் அனைத்தும் பொலிவூட்டப்பட்ட திருமண வீடுபோல காணப்படுகிறது.


மீனம்பாக்கம் பழைய விமான நிலைய நுழைவு வாயிலில் எதிரே, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பூங்காவை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். இங்கு இந்திய தேசிய கொடியும், மக்கள் சீன தேசத்து சிவப்புக் கொடியும் இணையாக பறக்கின்றன.


சீன அதிபரும், பிரதமர் மோடியும் பயணிக்கவுள்ள சாலைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், சாலையோரங்களில், மரக்கன்றுகள், பூஞ்செடிகள் நடப்பட்டு, மின்கம்பங்களிலும், வெள்ளிநிற வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன


இதேபோல், மாமல்லபுரம் நுழைவு வாயிலில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பு வளைவும், அர்ஜூனன்தபசு பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வளைவும், ஐந்துரத சாலையில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட வளைவும், கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் மலர்களால் அலங்கார வளைவும் அமைக்கப்பட்டுள்ளன.


கடற்கரை கோவிலைச்சுற்றிலும் வண்ணவிளக்கு அலங்காரங்களும், கடற்கரைப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட எல் ஈ டி விளக்குகளும் வைக்கப்பட்டு மாமல்லபுரம் ஒரு சொர்க்கலோகம் போல ஜொலிக்கிறது.


பாதுகாப்புக்காக இப்பகுதியில் உள்ள சினிமா திரை அரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு கப்பல்களும் கண்காணிப்பு பணிகளுக்காக கடலில் கம்பீரமாக பவனி வருகின்றன. அப்பகுதி மீனவர்கள் இரு நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News