இப்படியா காப்பி அடிப்பது ? பிகில் படத்தின் பல காட்சிகள் காப்பி தான் - அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
இப்படியா காப்பி அடிப்பது ? பிகில் படத்தின் பல காட்சிகள் காப்பி தான் - அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
By : Kathir Webdesk
ராஜா ராணி படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் அட்லீ. அதற்கு பிறகு தேறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கினார். அட்லீ இயக்கிய பல படங்கள் தொடர்ந்து கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறது. அதுமட்டுமின்றி படங்களில் வரும் சில சீன்களும் மற்ற மொழி படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுகிறது.
பிகில் படத்தில் கால்பந்து பயிற்சி அளிக்கும் சீன் ஒன்று வரும். அதில் விஜய் டீமில் இருக்கும் பெண்கள் கோல் அடிக்கவில்லை என்றால் கால்பந்து மைதானத்தின் இரு கோல் போஸ்டுக்கும் இடையில் ஓட வேண்டும் என தண்டனை கொடுப்பார். அந்த சீன் THE MIRACLE SEASON என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என சமூகவலைத்தளங்களில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த படத்தில் கைப்பந்து அணி பயிற்சியாளர் இதோ போலத்தான் செய்திருப்பார்.
Credits : Cine Ulagam