Kathir News
Begin typing your search above and press return to search.

ஜே.என்.யூ வில் விவேகானந்தர் சிலையை மர்ம நபர்களால் சேதப்படுத்தி தரமற்ற வார்த்தைகள் எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Nov 2019 8:35 AM IST

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம், விடுதிக்கட்டணம் ஆகியவை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

இதைத் திரும்பப் பெற வேண்டும் எனப் பல்கலைக்கழகத்தின் மாணவர் கடந்த 15 நாட்களாக வலியுறுத்தி வந்தனர். கட்டண உயர்வை கண்டித்து ஏபிவிபி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை சகித்துக்கொள்ள முடியாத சிலர் இந்தப் போராட்டத்தை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் புதன்கிழமை இரவு பல்கலைகழக வளாகத்திலிருந்த விவேகானந்தர் சிலையை சேதப்படுத்தினர். இந்துத்வா அமைப்புகளை கண்டித்து சில வாசகங்களையும் எழுதிச் சென்றுள்ளனர்.

சிலைக்கு கீழே பா.ஜ.கவையும் தரக்குறைவாக தரமற்ற வார்த்தைகளால் விமர்சித்துள்ளது. சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரித்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என காவல் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News