Kathir News
Begin typing your search above and press return to search.

சித்தார்த்தன் புத்தனான கதை புத்த பூர்ணிமா என்பது என்ன!

சித்தார்த்தன் புத்தனான கதை புத்த பூர்ணிமா என்பது என்ன!

சித்தார்த்தன் புத்தனான கதை புத்த பூர்ணிமா என்பது என்ன!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2019 11:26 AM IST


புத்த பூர்ணிமா என்கிற தெய்வீக தன்மை வாய்ந்த தினம் புத்த ஜெயந்தி என்ற பெயரில்
கொண்டாடப்படுகிறது. நிறைந்த பௌர்ணமியில் கவுதம புத்தர் பிறந்த தினம் ஆன்மீக ரீதியில்
முக்கியத்துவம் நிறைந்ததாக கருதப்படுகிறது. இவருடைய சீடர்களின் வாழ்விலிருந்து
எதிர்மறை அதிர்வுகளை அடியோடு அளித்து அவர்களின் வாழ்வில் ஆன்மீக ஒளி ஏற்றியவர்
இவர். மேலும் இந்த நாளில் இவர், இவருடைய முக்தியை அடைந்ததாலேயே இந்த தினம் ஒரு
புனித தினமாக இந்துக்களாலும், புத்த மதத்தை தழுவியவர்களாலும் கருதப்படுகிறது.
இத்தினம் வைஷாக் பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது.


கபிலவஸ்துவில் பிறந்த புத்தருக்கு பெற்றோர் இட்ட பெயர் சித்தார்த்தா. அவர் பிறந்த போதே
ஒன்று அவர் பெரும் சக்ரவர்த்தியாக நாடாள்வார், இல்லை பெரும் துறவியாக பூவார் என்று
ஜோதிடர்கள் கணிக்கப்பட்டது. இந்த கணிப்பை கண்டு அதிர்ந்து போன சித்தார்த்தனின்
பெற்றோர் அவனை நான்கு சுவர்களுக்குள்ளாகவே வரையறுத்திருந்தனர். ஆனால் விதி
என்பது வேறு. அந்த சிறுவன் உலக மக்களின் துயரத்தை துடைக்கவந்த மகா துறவியானார்.
அவருடைய 29 ஆவது வயதில் ஆடம்பர வாழ்வை உதறி அரண்மனையை விட்டு முதன்
முதலாக வெளியேறினார். வாழ்வை இழந்த ஒரு வயோதிகரும் ஒரு உயிரற்ற பிணமும்
வாழ்க்கை துயரங்களாலும், கணிக்க முடியா இடர்களும் நிறைந்தது என்பதை அவருக்கு
உணர்த்தியது.


இதன் பின் மரக்கட்டைகளை இடையே தன் முழு வாழ்வையும் ஆழ்ந்த தியானத்திற்கென
அர்ப்பணித்தார் சித்தார்த்தர். உண்மையை உணர்ந்து ஆன்மிக சாரத்தை அவர் ருசிக்க
தொடங்கிய பின் இந்த உலகம் அவரை கௌதம புத்தர் என அழைத்து பெருமை கொண்டது.


இன்றும் புத்த கயா பகுதி பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தளமாக
இருக்கிறது. உலகெங்கிலும் இருந்து ஏராளமான பயணிகள் இந்தியாவிலுள்ள புத்த கயாவிற்கு
புத்த பூர்ணிமா கொண்டாட வருகிறார்கள். போகிறூம் மேளா, சுதர்ஸராபன், மற்றும் பஞ்சசீல
ஆகியவை புனித திருநாளில் ஒருங்கிணைக்கப்படும் சில முக்கிய நிகழ்வுகளாகும். இதை
தாண்டி நீங்கள் அமைதியையும், மானத்தையும் விரும்புபவர்களாக இருந்தால், புத்த பூர்ணிமா
திருநாளில் புத்த கயா சென்றால் ஆசைகளிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.


இத்திருநாள் அன்று லட்ச கணக்கான பக்தர்கள் புத்த கயா வருகிறார்கள். இத்திருநாளில்
புத்தகயாவில் புத்தரின் சிலை புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு
இன்னும் ஏராளமான வழிகளில் கொண்டாட்டங்கள் அரங்கேறுகிறது


ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் பகுதிக்கும் தங்கள் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில்
இந்நாளை கொண்டாடுகின்றனர். சில பக்தர்கள் தங்களாலான தர்மங்களை உணவாக
பணமாக தானமாக வழங்குகின்றனர். பர்மா போன்ற நாடுகளில், புத்தர் முக்தியடைந்ததை


நினைவு கூர்ந்து மரியாதையை செய்யும் விதத்தில் போதி மரங்களுக்கு நீர் வார்கின்றனர் ,
ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் மக்கள் வீடுகளை தீபங்களால் அலங்கரிக்கின்றனர். மற்றும்
மூங்கில் குச்சிகளில் நட்சத்திரங்களை கட்டி வைக்கின்றனர் .


Next Story
கதிர் தொகுப்பு
Trending News