Kathir News
Begin typing your search above and press return to search.

பூமியின் துருவங்கள் மாறுகிறதா??

பூமியின் துருவங்கள் மாறுகிறதா??

பூமியின் துருவங்கள் மாறுகிறதா??

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Dec 2019 3:56 AM GMT


சமூகத்தில் செய்திகளில் உலா வந்த ஒரு விஷயம் பூமியின் காந்த வட துருவம் ரஷ்யாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது என்பதாகும். அவற்றைப் பற்றிய தெளிவினை இந்த கட்டுரை விளக்குகிறது.


காந்த துருவத்தின் மெதுவான நகர்தலானது தற்போது வேகம் அதிகரித்துள்ளது. சமீபத்திய தசாப்தங்களில், காந்த வட துருவமானது ஆண்டுக்கு சராசரியாக 55 கிலோமீட்டர் வேகத்தில் அதிகரித்ததை தரவுகள் நிரூபிக்கின்றன. பொதுவாக ஆண்டுக்கு 40 கிலோமீட்டர்கள் நிகழும் நகர்வில் சமீப காலங்களில் மாற்றங்கள் நிகழத்துவங்கியுள்ளது.


"தரவுகள் மூலம் கிடைத்த தகவலின் படி 1990 களில் இருந்து இந்த நகர்வின் வேகமானது, கடந்த நான்கு நூற்றாண்டுகளை விட மிக வேகமாக உள்ளது" என்று பிரிட்டிஷ் புவியியல் ஆய்வின் (பிஜிஎஸ்) புவியியல் காந்த நிபுணர் சியரன் பெகன் தெரிவித்துள்ளார்.


இந்த தரவு அமைப்பு உலக காந்த மாதிரி (WMM) என அழைக்கப்படுகிறது: ஜி.பி.எஸ் கருவிகள், மேப்பிங் சேவைகள் மற்றும் நுகர்வோர் திசைகாட்டி பயன்பாடுகள் வரை அனைத்திற்கும் பயன்படும் இந்த தகவல்களை நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் இராணுவம் ஆகியவை கூட பயன்படுத்தும்.


பொதுவாக பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. காந்த துருவங்கள் பூமியின் இயல்பான வடக்கு-தெற்கு முனைகளும் சற்று மாறுபட்டு இருக்கும். அதாவது புவியின் அமைப்பின் மூலமாக கிடைக்கும் துருவங்கள் 2, மற்றும் புவி காந்த அமைப்பின் மூலமாக கிடைக்கும் துருவங்கள் 2. பூமியின் காந்த வட துருவம் ஆனது 1881 ஆம் ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி 2250 கிலோமீட்டர்கள் நகர்ந்துள்ளது. தற்போது எடுக்கப்பட்டுள்ள கணக்கீடுகளின் படி இந்த காந்த வடதுருவம் செர்பியாவின் நோக்கி நகர்வதாக தெரியவந்துள்ளது. இது இயல்பான நகர்வு தான். இதுகுறித்து யாரும் பயப்படத் தேவையில்லை


இதற்கிடையில், புதிய WMM தரவு 2025 வரை நன்றாக உள்ளது. எனவே அப்போது வரை எந்த கவலையும் இல்லை. அதன் பின்னர் உள்ள உடனடி நகர்வுகள் எதுவும் இப்போது கணிக்கப்படவில்லை. எனினும் அடுத்து எவ்வகையான நகர்வுகள் நிகழக்கூடும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News