Kathir News
Begin typing your search above and press return to search.

தப்லிக் மாநாட்டால் கடலூரில் சமூக பரவலாக மாறும் கொரோனா?

தப்லிக் மாநாட்டால் கடலூரில் சமூக பரவலாக மாறும் கொரோனா?

தப்லிக் மாநாட்டால் கடலூரில் சமூக பரவலாக மாறும் கொரோனா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 April 2020 2:31 AM GMT

மத்திய மாநில அரசுகள் எவ்வளவு தான் நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா தொற்று குறித்த உண்மையை மறைத்து இருப்பதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை செய்தால் மட்டுமே சமூக பரவலை கட்டுபடுத்த முடியும் என்பதை உணர்வோம்

டெல்லி தப்லிக் மாநாடு சென்ற பிரிதிநிதிகளின் செயல்பாடுகள் அவர்களின் குடும்பத்தை பதம் பார்த்து வருகிறது என்பதை கூட உணராமல் அலட்சியமகா நடமாடுவது எதை விதைக்க என்பது அவர்களுக்கே வெளிச்சம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் கொரோனா பாதிப்பு 20 லிருந்து 26 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா உயிர்கொல்லி வைரஸ் தொற்று கடலூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு 20 இருந்தது.

அதில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது.அதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிட்சை அழிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் மேலும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் குரானா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் வெளிவந்த பரிசோதனை முடிவுகளின் படி 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் நெல்லிக்குப்பம் பகுதியில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவரின் 2 வயது பெண் குழந்தைக்கும், இதுபோல் சிதம்பரத்தில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவரின் 6 வயது ஆண் குழந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் டெல்லி மாநாடு சென்று திரும்பியவரின் 58 வயது மனைவிக்கும் 31 மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று வெளியான கொரோனா பரிசோதனை முடிவுகளின் படி பண்ருட்டியில் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவரின் 40 வயது மனைவிக்கும் 10 வயது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட இடங்கள் அனைத்தையும் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

அப்பகுதியை சேர்ந்த அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ப்பட உள்ளது.

நேற்று வரை கடலூர் மாவட்டத்தில் 26 நபர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது இவர்களில் 17 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் இதர 9 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி தப்லிக் மாநாடு கடலூர் மாவட்ட நிர்வாகத்தை முடக்கிவிட்டது காரணம் டெல்லி தப்லிக் மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் அனைவரும்

எதாவது ஒரு அரசியல் கட்சி பலத்துடன் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்ணில் மண்ணை தூவி மறைந்து இருந்து வருகின்றனர் இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா கொல்லை நோய் சமூக பரவலாக மாறும் அபாயம் விலக வில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உணரவேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News