Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மற்றும் அவரின் தாயார் குறித்து தரக்குறைவாக பேசிய குமரிமாவட்ட நபர், காவல்துறை வலைவீச்சு – குமரியில் பரபரப்பு!!!

பிரதமர் மற்றும் அவரின் தாயார் குறித்து தரக்குறைவாக பேசிய குமரிமாவட்ட நபர், காவல்துறை வலைவீச்சு – குமரியில் பரபரப்பு!!!

பிரதமர் மற்றும் அவரின் தாயார் குறித்து தரக்குறைவாக பேசிய  குமரிமாவட்ட நபர், காவல்துறை வலைவீச்சு – குமரியில் பரபரப்பு!!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 April 2020 2:28 AM GMT

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சார்ந்த 'Ben Talks' என்ற ஒரு அடையாளத்தோடு கூடிய நபர் ஒரு வீடியோ வை வெளியிட்டுள்ளார் அதில் பாரத பிரதமர் மற்றும் அவரின் தாயார் குறித்து தரக்குறைவாக அசிங்கியமான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த தமிழக பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்கள் காவல்துறை தலைவரிடம் புகார் அளித்துள்ளார். அந்தபுகரின் அடிப்படையில் அந்த நபரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் 153 (A), 294(b), 505(2), 509 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது காவல் துறை.


இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்கள் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'Ben Talks' என்ற ஒரு அடையாளத்தோடு கூடிய ஒரு வீடியோ வை பார்க்க நேர்ந்தது. அதில் பிரதமரை, அவரது தாயாரை தரக்குறைவாக பேசியுள்ளான் ஒருவன். தமிழக காவல் துறை தலைவரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளேன். தாமதம் செய்யாது, நடவடிக்கை எடுத்து அவனை கைது செய்ய வேண்டும்.


தமிழகத்தில் இது போன்ற தரக்குறைவான பேச்சுக்களும், விமர்சனங்களும் கடந்த சில காலங்களாக அதிக அளவில் நடைபெறுகிறது. இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? தூண்டி விடுவது யார்? என்ற அரசியல் கேள்விகள் தேவையில்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள தி மு க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், தமிழ் தேசியம் பேசும் ஒரு சில அமைப்புகள், சில மதஅடிப்படைவாத அமைப்புகளின் விமர்சனங்கள் இவர்களை ஊக்குவிக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. உலகத்தில் எந்த நாட்டிலும் பிரதமர் குறித்தோ அல்லது அதிபர் குறித்தோ தரம் தாழ்ந்து பதிவிட முடியாது. ஆனால் தமிழகத்தில் சமூக ஊடகங்களில் பிரதமர் மற்றும் முதல்வர் குறித்த தரக்குறைவான பதிவுகளை செய்யும் சில நபர்களை ஊக்குவித்து அவர்களுக்கு வெண்சாமரம் வீசுவது சில முற்போக்குவாதிகள் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொள்பவர்களும், நடுநிலையாளர்கள் என்று மார் தட்டி கொள்ளும் அரசியல் விமர்சகர்களும், சில அரசியல் கட்சி தலைவர்களும் என்பது அதிர்ச்சியளிக்கிறது, அவர்கள் பிரபலமாவதற்கும் துணைநிற்கின்றனர்.


கடந்த ஆறு வருடங்களில் இந்திய நிர்வாகத்தில் அமைப்பு ரீதியான பல்வேறு மாற்றங்களை பாஜக மோடி அரசு கொண்டு வந்திருக்கிற சூழ்நிலையில், மிக பெரிய மாற்றங்களை தாங்கிக்கொள்ள முடியாத சில சக்திகள், அதை நேர்கொண்டு எதிர்க்க முடியாதவர்கள், தரக்குறைவான சிந்தனையோடு பாஜக எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்பதை ஆமோதித்து தரம் தாழ்ந்த அரசியலுக்கு துணை நிற்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களில் ஒரு சிலரை தவிர இது போன்ற பேச்சுக்களை பொது வெளியில் கண்டிப்பது இல்லை. இன்னும் சொல்லப்போனால், தி மு க வின் பொதுக்கூட்டங்களில் பிரதமர் குறித்தும் முதல்வர் குறித்தும் ஆபாசமான, தரக்குறைவான விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. ஒரு பொதுக்கூட்டத்தில் தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்களின் முன்பே பிரதமரை தரக்குறைவாக விமர்சனம் செய்தும் அவர் அமைதி காத்தது போன்ற செயல்கள் தான் இந்த நிலைக்கு காரணம்.

தொலைக்காட்சி விவாதங்களில் கூட பிரதமரை, முதல்வரை, சக பங்கேற்பாளர்களை ஒருமையில் அழைப்பது, அவதூறாக,தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது என்பது அதிகரித்து வருகிறது. ஆனால், நெறியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இதை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், பல்வேறு அரசியல் மற்றும் கொள்கை அழுத்தங்களின் காரணங்களால், அதை சீர்செய்யும் முயற்சியில் முனைப்பு காட்டுவதில்லை. பாஜக ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு கட்சியின் ஆதரவாளர்கள் பலர் சமூக ஊடகங்களில் தரக்குறைவாக விமர்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதே. ஆனால் ஒரு வினைக்கு எதிர்வினை என்று அனைவரும் கூறிவிடுவார்கள். யார் துவக்கியது? யார் தொடர்ந்தது என்பது கண்டுபிடிக்க முடியாத புதிராகி விடும்.

கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசும், காவல்துறையும் எடுப்பதன் மூலம் மட்டுமே தரமான தமிழகம் தரக்குறைவாக மாறுவதை தடுக்க முடியும். கொள்கை வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் அதை தரக்குறைவாக விமர்சிப்பவர்களை ஊக்குவிப்பதை, அமைதி காப்பதை அரசியல் கட்சி தலைவர்கள் கைவிட வேண்டும்.கண்டிக்க வேண்டும். இது இரண்டும் தான் தீர்வு.

இந்தியாவின் பிரதமரையும், அவரின் தாயாரையும் தரக்குறைவாக 'Ben talks Tamil' சேனல் என்ற பெயரில் 'you tube' ல் பதிவு செய்து பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறைக்கு ஆதாரத்தோடு நான் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் 153 (A), 294(b), 505(2), 509 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது காவல் துறை. விரைவில் குற்றம் செய்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தணடனை வழங்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக காவல் துறை இயக்குனருக்கு என் நன்றிகளும், வாழ்த்துக்களும். சமூக ஊடங்களிலும், வீடியோ பதிவுகளிலும் யாரை குறித்தும் தரக்குறைவாக பதிவிடுவதை, பேசுவதை தவிர்க்க வேண்டும். அப்படி பதிவிடுபவர்கள், பேசுபவர்கள் யாராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்குவதன் மூலமே சட்டம் ஒழுங்கை, சமூக கட்டுப்பாட்டை பேண முடியும் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News