Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு கட்டுரை: இந்தியாவை மிரட்டியதா அமெரிக்கா?

சிறப்பு கட்டுரை: இந்தியாவை மிரட்டியதா அமெரிக்கா?

சிறப்பு கட்டுரை: இந்தியாவை மிரட்டியதா அமெரிக்கா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 April 2020 2:18 PM GMT

கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பிரச்சனை கூட அரசியலில் சிக்கிக்கொண்டு உள்ளது!

பொதுவாகவே கியூபா மற்ற நாடுகளுக்கு மருத்துவ உதவி வழங்குகிறது; அமெரிக்கா இந்தியாவை விட ஏதாவது துறையில் சிறந்து விளங்குகிறது போன்ற செய்திகளை பார்த்தே பழகிய சிலருக்கு இந்தியா ஒரு விஷயத்தில் அமெரிக்காவை விட ஒரு படி முன்னே உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள கசக்கிறது போல.

மோடி என்ற ஒரு அரசியல்வாதி மீது எவருக்கு வேண்டுமானாலும் எப்பேர்ப்பட்ட காழ்ப்புணர்ச்சி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நாடு என்று வரும் போது, அதுவும் வேறு ஒரு நாட்டுடனான உறவு என்று வரும் போது நமக்குள் இருக்கும் பகைமையை மறந்து ஒன்று பட்டு நிற்பதே ஒவ்வொரு குடிமகனுக்கும் அழகு.

ஆனால் காலத்தின் கொடுமை, பிரதமர் என்ற ஒரு காரணத்திற்காக மோடிக்கு மரியாதை கொடுத்து விட்டால் நான் பா.ஜ/க ஆதரவாளன்!! இந்தியாவை பிற நாடுகளோடு ஒப்பிட்டு பெருமையாக பேசிவிட்டால் சங்கி!!! பாரத் மாதா கி ஜே என கூறி விட்டால் நான் முழு நேர RSS ஊழியன் !!! - இப்படி தான் கட்டமைக்கப்பட்டு உள்ளது சமூக வலைத்தளங்களில்...

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் செய்யும் தீவிரவாதத்திற்கு ஆதரவான செயல்களை இந்தியா உலக அரங்கில் ஆதாரத்துடன் முன்வைக்கும் போதும், இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என முழக்கமிட்ட நம்மூர் இம்ரான் கான் ரசிகர்களுக்கு நம் நாட்டை அவதூறு செய்வதை விட வேறு என்ன தெரிய போகிறது.

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.

சில நாட்கள் முன்னர் அமெரிக்கா அதிபர் டிரம்ப், கொரோனாவிற்கு தற்காலிக தீர்வாக இருக்க கூடிய Hydroxychloroquine என்ற மருந்தை அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு இல்லை என்றால் தக்க பதிலடி இருக்கும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்ததாகவும், அதற்கு பயந்து இந்தியா மருந்தை ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டதாகவும் சமூக வலைதள போராளிகள் கிளப்பி விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அதுவும் டிரம்ப் ஒரே ஒரு போன் கால் செய்து மிரட்டியதாகவும், இந்தியாவின் பாச்சா பாகிஸ்தானிடம் பலிக்கும், அமெரிக்காவிடம் பலிக்காது என அந்த இம்ரான் கான் ரசிக கூட்டம் மோடியின் மீது உள்ள வெறுப்பில் ஒட்டு மொத்த இந்தியாவையே கேவலப்படுத்தும் நோக்கில் மும்முரமாக செயல்பட்டுக்கொண்டு உள்ளது.

ஆனால் நடந்தது என்னவோ தலை கீழ்....

அமெரிக்கா என்னவோ இந்தியாவிடம் வேண்டுகோள் தான் விடுத்தது உள்ளது.

Did Donald Trump actually threaten India with retaliation over hydroxychloroquine?

இந்தியா டுடே பத்திரிக்கை மேலே உள்ள லிங்கில் டிரம்ப் அவர்களின் பேச்சை சரியாக பதிவு செய்து உள்ளது. அதில்,

Reporter: Thank you, sir, are you worried about (a) retaliation to your decision to ban (the) export of medical goods like Indian prime minister Modi's decision to not export hydroxychloroquine to (the) United States and other countries?

Trump: I don't like that decision if that's er... I don't... I didn't hear that that was his decision. I know that he stopped it for other countries. I spoke to him yesterday, we had a very good talk and we will see whether or not that's his ... I would be surprised if he would, you know because India's [sic] does very well with the United States. For many years, they have been taking advantage of the United States on trade so I would be surprised if that was his decision... He'd have to tell me that. I spoke to him Sunday morning, called him, and I said we appreciate your allowing our supply to come out... if he doesn't allow it to come out that would be okay but, of course, there may be retaliation, why wouldn't there be?

இவ்வாறு தெரிவித்து உள்ளார். அதாவது, இந்தியா மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து உள்ளதால் பதிலடி கொடுப்பீர்களா? எனும் தொனியில் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு,

"இந்தியாவின் முடிவு சற்று வருத்தம் அளிக்கிறது, நான் அவரிடம் (மோடியிடம்) பேசினேன். இந்தியா அமெரிக்கா உறவு நன்றாக இருக்கிறது, அவர் முடிவை மறுபரிசீலனை செய்வார் என நம்புகிறேன்" என்று கூறிவிட்டு , அவர்கள் தராத பட்ச்சத்தில் எதிர்வினை இருக்குமா என்ற கேள்விக்கு, அவர்கள் தரவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் நம்மிடம் அதற்கான எதிர்ப்பு இருப்பதில் என்ன தவறு என்று தான் கூறி உள்ளார்.

அதாவது, டிரம்ப் எங்கும் பகிரங்க மிரட்டல் விடுத்ததாக தெரியவில்லை. தொலைபேசியில் பேசிய போதும் அவர் முடிவை மறு பரிசீலனை செய்வார் என நம்புகிறேன் என்று தான் கூறி உள்ளார்.

அதாவது டிரம்ப் இந்தியாவிடம் கெஞ்சி தான் உள்ளார் என்பது சுய புத்தி உள்ள எவரும் புரிந்துக்கொள்ள கூடியது தான். ஆனால், மோடியின் மீது உள்ள வெறுப்பை இந்தியாவின் மீதுள்ள வெறுப்பாக மாற்றி வைத்து இருக்கும் இம்ரான் கானின் விழுதுகளுக்கு அது மிரட்டலாகவே தோன்றி இருக்கிறது.

பிறகு இந்தியா ஏற்றுமதி தடையை தளர்த்திய பிறகு அதே டிரம்ப் அவர்கள் மோடியையும் இந்தியாவையும் புகந்து தள்ளியது இந்த சமூக வலைதள போராளிகள் காதில் ஏனோ விழவில்லை.

'He was great': Trump praises Modi for releasing Hydroxychloroquine

In the interview with Fox News, Trump said, "I bought millions of doses. More than 29 million. I spoke to PM Modi, a lot of it comes out of India. I asked him if he would release it? He was Great. He was really good. You know they put a stop because they wanted it for India. But there is a lot of good things coming from that."

Fox News-க்கு அளித்த பேட்டியில், மிரட்டியதை போல எதையும் கூறாமல், இந்தியா பெரும் உதவி செய்துள்ளது, மோடியிடம் நான் கேட்ட பின்னர் உயர்வாக நடந்துக் கொண்டதாக தான் டிரம்ப் கூறி உள்ளார்.

இங்கே உள்ள போலி போராளிகள் மோடி எதிர்ப்பாளர்களா அல்லது இந்திய எதிர்பாளர்களா என்பதை அவர்கள் தான் தெளிவு படுத்த வேண்டும்,

நாட்டுக்கு பிரயோஜனமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பாரமாக இருக்காதீர்கள்.

கியூபா மருத்துவ உதவிகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பினால் புகழ்வதும் இந்தியா அதையே செய்தால் இகழ்வதும், டிரம்ப் இந்தியாவிடம் கெஞ்சினால் மிரட்டுவதாக திரித்துக் கூறுவதும், அதே பிரேசில் அதிபர் இராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசும் போது அடக்கி வாசிப்பதும் தான் உங்கள் புரட்சி என்றால் அது எனக்கு தேவையே இல்லை.

இந்தியாவை ஆதரிப்பது மோடியை ஆதரிப்பது என்றால், இந்தியாவை விட்டுக்கொடுக்காமல் தேசியவாதியாக என்னை முன்னிறுத்துவது எனக்கு சங்கி பட்டம் கொடுக்குமேயானால் நான் தலைசிறந்த சங்கியாகவே இருப்பதில் பெருமை கொள்கிறேன்!!!

வாழ்க தமிழ்!

வளர்க தமிழக மக்கள்!!

ஜெய் ஹிந்த்!!!

Next Story