Kathir News
Begin typing your search above and press return to search.

சிங்கப்பூரில் மிக வேகமாக பரவும் கொரோனா, பீதியில் மக்கள்.!

சிங்கப்பூரில் மிக வேகமாக பரவும் கொரோனா, பீதியில் மக்கள்.!

சிங்கப்பூரில் மிக வேகமாக பரவும் கொரோனா, பீதியில் மக்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 April 2020 5:27 AM GMT

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா வைரஸ் கிருமி தொற்று அதிகரித்து வருகிறது. காரணம் புரியாமல் குழம்பி போய் உள்ளது சிங்கப்பூர் அரசு. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக நோய் தொற்று 942 என்கிறது சிங்கப்பூர் சுகாதார நிறுவனம்.

நோய் தொற்று மொத்த பாதிப்பு ஐந்து ஆயிரத்தை கடந்தது. மேலும் இதுவரை உயிர் இழப்பு 11 ஆக அதிகரித்துவிட்டது. சிங்கப்பூர் குடிமக்கள் 14 நபர்களை மட்டுமே கொரோனா நோய் தாக்கியதாக கூறுகின்றனர்.

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்த சுமார் மூன்று லட்சம் மக்கள் சிங்கப்பூரில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்திய தொழிலாளர்கள் பலர் கொரோனா தாக்குதல்களுக்கு ஆளாகிவிட்டனர் என்பது குறிபிடத்தக்கது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடு சிங்கப்பூர். தமிழகம், ஆந்திரா, கர்நாடக, ஒடிஷா மாநில தொழிலார்கள் பலர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறைவு என நம் நாட்டு ஊடகங்கள் வானத்துக்கும் பூமிக்குமாக புகழ்ந்தன. ஆனால் நிலைமை தலைகீழாக மாறி போனது நமது நாட்டை சேர்ந்த அவசர குடுக்கை ஊடகங்கள் நமது நாட்டை பற்றி பேசுவது குறைவு

கொரோனா தாக்கத்தில் இந்தியாவை விட நூறு மடங்கு நோய் தாக்கதல் உயர்ந்து நிற்கிறது சிங்கப்பூர் இருந்த போது வேதனை நமக்கும் தான் இந்திய உறவுகள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News