சென்னை நுங்கம்பாக்கத்தில் இரண்டு காவலர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி : காவல்நிலையம் மூடல்.!
சென்னை நுங்கம்பாக்கத்தில் இரண்டு காவலர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி : காவல்நிலையம் மூடல்.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் சென்னையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு வேளையில் இருக்கும் காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை நான்கு காவல்துறையினர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தருணத்தில் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் இரண்டு காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அவர்களை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. மேலும் அவர்களின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பின்னர் அங்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் அனைத்து காவலர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த உள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2529756