Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் அரசால் சாம்பலான நிலக்கரி பாஜக அரசால் வைரமானது - மக்களவைகள் நிர்மலா சீதாராமன் அதிரடி!

காங்கிரஸ் அரசு நிலக்கரியை சாம்பலாக்கியது. நாங்கள் வைரமாக்கினோம் காங்கிரஸ் அரசு குடும்பத்திற்கு முன்னுரிமை அளித்து நாட்டின் நெருக்கடியில் தள்ளியது என்று நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்

காங்கிரஸ் அரசால் சாம்பலான நிலக்கரி பாஜக அரசால் வைரமானது - மக்களவைகள் நிர்மலா சீதாராமன் அதிரடி!
X

KarthigaBy : Karthiga

  |  10 Feb 2024 4:30 PM GMT

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொருளாதாரத்தை கையாண்ட விதம் குறித்த வெள்ளை அறிக்கையை நேற்று முன்தினம் மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்நிலையில் மக்களவையில் நேற்று அந்த வெள்ளை அறிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்தை தொடங்கி வைத்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது :-


10 ஆண்டுகள் சில பிரச்சனைகளுடன் ஆண்டவர் ஆட்சி வேறொரு பிரச்சனையுடன் பத்தாண்டுகள் ஆண்ட மற்றொரு ஆட்சி இந்த ஒப்பீடு மூலம் ஒரு அரசு உண்மை வெளிப்டுத்தும் தன்மை ஆகியவற்றுடன் செயல்பட்டால் அதன் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம் .அதே சமயத்தில் தேசத்தை முதன்மையாக கருதாமல் குடும்பத்துக்கு முன்னுரிமை அளித்து ஒளிவு மறைவுடன் செயல்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் பார்த்தோம்.


முந்தியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பொருளாதாரத்தில் பலவீனமான ஐந்து நாடுகள் பட்டியலில் இந்தியா இருந்தது. ஆனால் மோடி ஆட்சியில் பொருளாதாரத்தில் முன்னணி ஐந்து நாடுகள் பட்டியலுக்கு இந்தியா வந்துள்ளது .விரைவில் மூன்றாவது இடத்தை எட்டிப் பிடிக்கும். கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார மண்டல நிலைக்குப் பிறகு என்ன நடந்தது, கொரோனாவுக்கு பிறகு என்ன நடந்தது என்பதை ஒப்பிட்டு காட்டி இருக்கிறோம்.


அரசின் நோக்கம் உண்மையாக இருந்தால் பலன்கள் நன்றாக இருக்கும். பொருளாதார மனநிலையை விட கொரோனா மிகவும் ஆபத்தானது. இருப்பினும் மோடி அரசு உண்மை, வெளிப்படை தன்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் அதை கையாண்டது. மக்களுக்கு இலவச தடுப்பூசி அளித்தது. ஆனால் சர்வதேச பொருளாதாரம் அந்த நடையைக் கையாளுவதில் முந்தைய அரசுக்கு தெளிவான நோக்கம் இல்லை. நாட்டு நலனை பாதுகாக்க ஒன்றும் செய்யவில்லை .


ஊழலுக்கு மேல் ஊழல் நடந்தது. முந்தைய அரசு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூபாய் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கை அறிக்கை தெரிவித்தது .214 நிலக்கரி சுங்க உரிமங்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. இந்த ஊழலால் வேலை இழப்பு ,நிலக்கரி தட்டுப்பாடு, மின் தட்டுப்பாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் மோடி அரசு நிலக்கரி சுரங்க ஏலத்தை வெளிப்படை தன்மையுடன் நடத்தியது. தற்போது நிலக்கரி உற்பத்தி 567 டன்னில் இருந்து 900 உயர்ந்துள்ளது . காங்கிரஸ் அரச நிலக்கரியை சாம்பல் ஆக்கியது .மோடி அரசு தனது கொள்கைகள் மூலமாக நிலக்கரியை வைரமாக மாற்றியது. இப்போது காங்கிரஸ் முதலை கண்ணீர் வடிக்கிறது .


நிலக்கரி சுரங்கங்களை குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் மற்றும் ஒரு குட்கா கம்பெனிக்கு கூட காங்கிரஸ் கொடுத்தது. ஆனால் நாங்கள் பெரும் தொழிலதிபதர்களை ஆதரிப்பதாக காங்கிரஸ் சொல்கிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார். நிர்மலா சீதாராமன் பேசிய போது காங்கிரஸ் உறுப்பினர்கள் குறிப்பிட்டு கூச்சலிட்டனர். இடையூறு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து "உங்களுக்கு தைரியம் இருந்தால் என் பேச்சில் குறிக்கிடாடாதீர்கள் பதில் மட்டும் சொல்லுங்கள்" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News