Kathir News
Begin typing your search above and press return to search.

தனியார் விமான நிறுவனத்தின் விளம்பரத்திற்கு பதிலடி தந்து மூக்குடைத்த தமிழக பட்டாசு நிறுவனம்!!

தனியார் விமான நிறுவனத்தின் விளம்பரத்திற்கு பதிலடி தந்து மூக்குடைத்த தமிழக பட்டாசு நிறுவனம்!!

தனியார் விமான நிறுவனத்தின் விளம்பரத்திற்கு பதிலடி தந்து  மூக்குடைத்த தமிழக பட்டாசு நிறுவனம்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2019 7:07 AM GMT


தீபாவளிக்கான ஏற்பாடுகள், நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் அதை ஆர்வத்துடன் கொண்டாடத் தயாராகி வரும் நேரத்தில், இந்து பண்டிகையை அடிக்கடி குறிவைக்கும் சில குழுக்கள், வெடி வெடிப்பதுக்கு எதிராக போலி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.


சுற்றுசூழலை பாதுகாக்கிறோம் என்று கூறி பட்டாசு தொழிற்சாலைகளையும் எதிர்க்கும் இவர்கள், சுற்றுசூழல் பாதுகாப்பு என்ற அவர்களது வார்த்தைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள். இவ்வாறு பலரின் முற்போக்குத்தனம் பல விதத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.


ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம, அவர்களது விளம்பர பாதகைக்கு அருகில் "No crackers" என்ற பாதகையை வைத்துள்ளது. இந்த நிறுவனம் சுற்றுசூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட நிறுவனம் என்று காட்டிக்கொள்வதற்கு இவ்வாறு செய்கிறது. ஆனால் இந்த நிறுவனம் வழங்கும் சேவையே சுற்றுசூழலுக்கு பட்டாசுகளை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.



தனியார் விமான நிறுவனத்தின் விளம்பரத்திற்கு பதிலடி தந்து  மூக்குடைத்த தமிழக பட்டாசு நிறுவனம்!!


பட்டாசு தொழிற்சாலைகளை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு இதுவே வாழ்க்கை. பட்டாசு விற்பனை தீபாவளி சமயத்தில்தான் அதிகம் நடக்கும் என்பதால் இந்த தீபாவளி சமயத்தில் பட்டாசு விற்பனையை நம்பிதான் அவர்களது முழு வருட வருமானமே உள்ளது. இந்த சமயத்தில் ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் பட்டாசிற்கு எதிராக பேசுவது, இந்த தொழிற்சாலைகளையும், குடும்பங்களையும் பாதிக்கிறது.


இதனால் எரிச்சல் அடைந்த "" என்ற பட்டாசு நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் கேள்வி கேட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மாசு கட்டுப்பாட்டு விமானங்களை பயன்படுத்துகிறதா, சுற்றுசூழலை பாதிக்காத எரிபொருளை பயன்படுத்துகிறதா, இந்த நிறுவனம் பட்டாசை பற்றி பேச தகுதியுள்ளதா, விமானங்கள் சுற்றுசூழலை பாதிப்பதால் இவர்கள் இந்த தொழிலை நிறுத்துவார்களா என்றும் பல கடுமையாக கேள்விகளை கேட்டது இந்த பட்டாசு நிறுவனம்.


மேலும் கார்பன் டை ஆக்ஸைடை 1 பயணி 1 கிலோமீட்டர் பயணம் செய்வதுக்கு 285 கிராம் வெளிவருகிறது என்றும், இதை அவர்கள் அறிவார்களா என்றும் கேள்வி எழுப்பியது. "நாங்கள் இவ்வாறு பதாகை வைத்தால் ஒத்துக்கொள்வீர்களா?" என்றும் கேள்வி கேட்டனர். உங்களை மேம்படுத்திப்பேசுவதற்கு மற்றவர்களை கெடுக்காதீர்கள் என்றும் அந்த பட்டாசு நிறுவனம் கேட்டுக்கொண்டனர். இது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News