Kathir News
Begin typing your search above and press return to search.

சாப்பாட்டை வீணாக்காமல் சாப்பிட்டால் ரூ.5 தள்ளுபடி - உணவை கடவுளாக மதித்து கோவையை கலக்கும் ராயல் ஹிந்து ரெஸ்டாரண்ட்.!

சாப்பாட்டை வீணாக்காமல் சாப்பிட்டால் ரூ.5 தள்ளுபடி - உணவை கடவுளாக மதித்து கோவையை கலக்கும் ராயல் ஹிந்து ரெஸ்டாரண்ட்.!

சாப்பாட்டை வீணாக்காமல் சாப்பிட்டால் ரூ.5 தள்ளுபடி - உணவை கடவுளாக மதித்து கோவையை கலக்கும் ராயல் ஹிந்து ரெஸ்டாரண்ட்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Aug 2019 2:47 PM IST


கோவையில், உணவு வீணாவதை தடுக்க, தனியார் உணவகம் ஒன்று கேஷ் பேக் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், கோவை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ராயல் ஹிந்து ரெஸ்டாரண்ட் (ஆர்ஹெச்ஆர்) நிர்வாகத்தினர் கேஷ் பேக் வழங்கி பாராட்டி வருகிறார்கள். இந்த ஓட்டலின் மேலாளர் ரத்னவேலின் மகன் குருமூர்த்தி இதுபற்றி வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்தான் இத்தகவல் வெளியாகியுள்ளது. 1931ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் இந்த ஓட்டல், சுவையும், தரமும் பற்றி கவனம் செலுத்தும் அதேசமயம், சமூக அக்கறையிலும் தேவையான பங்களிப்பு வழங்க விரும்புகிறது.





மேலும், இந்த ஹோட்டலில் அரசு பிளாஸ்டிக் தடை செய்யும் முன்பே, ஸ்வீட் போன்ற உணவுகளுக்கு பாக்கு மட்டை போன்ற இயற்கைக்கு உகந்த பைகளைப் பயன்படுத்தினர். இப்போது, துணிப்பையும் பயன்படுத்திவருகின்றனர். பஃபே சிஸ்டம் போன்ற சில வழிமுறைகளால் உணவு வீணாவதைத் தடுக்க முடிந்தாலும், இலையிட்டு அமர்ந்து பரிமாரி உணவு உண்ட நம் பாரம்பர்யம் இதை சற்றே இடைமறிக்கிறது. இதை எல்லாம் தாண்டி, இத்தகைய திட்டங்களால் மக்களைக் கவர்ந்தால், உணவு வீணாவதைத் தடுக்கலாம் என்பதற்கு ஆர்.ஹெச்.ஆர் ஒரு முன் உதாரணம்.


ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, 2019-ம் ஆண்டின் உலகலாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வுப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்தியாவில் மட்டும் 194.4 மில்லியன் மக்கள், அதாவது இந்திய மக்கள் தொகையில் 14.5% பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 20.8% பேர் எடைக் குறைவு பிரச்னையால் அவதிப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News