Kathir News
Begin typing your search above and press return to search.

பொதுநல பணியில் கோவையில் மக்கள் சேவை மையம் : பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்டி பரிசளிப்பு விழா!

பொதுநல பணியில் கோவையில் மக்கள் சேவை மையம் : பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்டி பரிசளிப்பு விழா!

பொதுநல பணியில் கோவையில் மக்கள் சேவை மையம் : பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்டி பரிசளிப்பு விழா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Sep 2019 11:24 AM GMT


மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் கோவையில் மக்கள் சேவை மையம் அமைப்பு தொடங்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக பாஜக பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் வளர்ச்சிக்கான மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள், கல்வி கடன் பெறுவது தொடர்பான ஆலோசனைகள் உட்பட பல்வேறு சேவைகள் மக்கள் சேவை மையத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளைச் சென்றடைய கோவை மக்கள் சேவை மையம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாகவும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகவும் கல்லூரி மாணவர்களுக்கென குறும்படப் போட்டியினை நடத்தியது. இந்தப் போட்டியில்‘பிரதமர் மோடி அவர்களின் நலத்திட்டங்கள் வாயிலாக சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைப்’ பிரதிபலிக்கும் வகையிலான குறும்படங்களை தயாரித்து கல்லூரி மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் பதினெட்டு கல்லூரிகளில் இருந்து 27 குறும்படங்கள் கலந்து கொண்டுள்ளன. இதில் இருந்து மிகச்சிறந்த மூன்று படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மற்றும் 1,34,000/- வரையிலான பரிசுகள் வழங்கப்பட்டது. நடுவரின் சிறப்புத் தேர்வுப்படம், சிறந்த நடிப்பு, ஓளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் என பல்வேறு பிரிவுகளில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.


பரிசளிப்பு விழா செப்டம்பர் 27 -ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சிங்காநல்லூர் எஸ்.எஸ்.வி.எம் சர்வதேசப் பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மக்கள் சேவை மையம் தலைவர் வானதி சீனிவாசன் தலைமையுரையாறறினார். அவர் பேசியதாவது, மக்கள் நலனுக்காக பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அது இன்னும் தேவையான மக்களைச சரியாக சென்று சேராமல் உள்ளது. அனைத்து திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக சென்று சேர வேண்டும். மக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, எஸ்.எஸ்.வி.எம் பள்ளிக் குழுமத்தின் தாளாளர் மோகன், மற்றும் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை, ஆகியோர் கலந்து கொண்டனர்.


முதல் பரிசு பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் வென்றனர். 50,000 ரூபாய், வெற்றிக்கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் பரிசு 25,000 ரூபாயினை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் வென்றனர். மூன்றாம் பரிசு ரூ.10,000 எஸ்.என்.எஸ் ராஜலஷ்மி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் வென்றனர். சிறந்த நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து குழுக்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News