Kathir News
Begin typing your search above and press return to search.

அல்லாவின் விருப்பப்படி இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வாருங்கள்!!

அல்லாவின் விருப்பப்படி இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வாருங்கள்!!

அல்லாவின் விருப்பப்படி இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வாருங்கள்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Oct 2019 3:21 AM GMT


காஷ்மீரிகளின் நலனுக்காகவும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கிற இலட்சியத்தின் அடிப்படையிலும் சமீபத்தில் இந்திய அரசு காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டத்தை நீக்கி அங்கு பொதுவான வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் மேலும் பிரச்சனைகளை உருவாக்க இந்தியாவின் முடிவை எதிர்த்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உலக நாடுகளின் ஆதரவை பெரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அமேரிக்கா, சீனா உட்பட அனைத்து நாடுகளும் அவருடைய கோரிக்கையை புறக்கணித்துவிட்டன.


இதனால் அதிருப்திக்கு உள்ளான இம்ரான்கானுக்கு உள்நாட்டிலும் கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. கடும் பொருளாதார மந்தம், காஷ்மீர் விவகாரத்தில் பின்னடைவால் அந்த நாட்டை மறைமுகமாக ஆட்டிப்படைக்கும் இராணுவத்தின் அதிருப்திக்கும் அவர் உள்ளானார். இதனால் அவர் பதவி பறி போகலாம் என்கிற நிலை அங்கு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியாளர்களையும், ராணுவத்தினரையும் திருப்தி செய்யும் வகையில் ஒரு பயங்கரவாதி போல அவர் நேற்று பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இம்ரான்கான் நேற்று பேசுகையில் “ காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வர உலகமே மறுத்தாலும் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரிகளுடன் இணைந்து ஜிகாத்(புனிதப்போர்) மேற்கொள்ள பாகிஸ்தானியர்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் அல்லாவை நாம் மகிழ்ச்சி படுத்தமுடியும்” என பேசியுள்ளார்.


உலகம் முழுவதும் வன்முறைகளை நடத்தும் பயங்கரவாதிகள்தான் ‘ஜிகாத்’ என்ற பெயரிலும், ‘அல்லாவின் விருப்பம்’ என்ற பெயரிலும் மற்ற இஸ்லாமியர்களை வன்முறைக்கு தூண்டுவார்கள். இந்த நிலையில் பயங்கரவாதிகளைப் போல இம்ரான்கான் பேசி இந்தியாவுக்கு எதிராக போராடும்படி மக்களை அழைத்தது பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.




https://kathirnews.com/2019/10/02/dmk-leader-kills-youth-the-climax-of-dmk-anarchy/


இம்ரான்கான் உயர்கல்வி பயின்றவர், சிறந்த விளையாட்டு வீரராக இருந்து புகழ் பெற்றவர். இவரால் பாகிஸ்தான் திருந்தும்..மக்கள் முன்னேற்றமடைவர் என்ற எதிர்பார்ப்பு தற்போது இவரால் பாழாகி வருகிறது. பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பயங்கரவாதிகளை ஆதரிக்கும் இராணுவத்தினரை திருப்தி படுத்தவே அவர் இவ்வாறு பேசத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும், இம்ரான் கானுக்கு தலிபான் தொடர்புகள் உண்டு என்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மத வெறியர்களுக்கு அவர் வெளிப்படையாக ஆதரவு தருகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் அரசல்..புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போதைய அவருடைய பேச்சு பாகிஸ்தானை இனி எப்போதும் அந்த அல்லாவால் கூட திருத்த முடியாது என்கிற நிலையையே உருவாக்கியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News