அனுமதியில்லா பகுதிகளில் கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டிடங்கள் - ஆய்வு செய்ய வருகிறது அதிகாரிகள் குழு
திட்டமில்லா பகுதிகளில் கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டிடங்களை அனுமதிக்க அதிகாரிகள் குழு மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு நடத்துகிறது.
By : Karthiga
தமிழகத்தில் திட்டமிடப்படாத பகுதிகளில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு அனுமதி அளிப்பதற்காக மாவட்ட வாரியாக ஆய்வு செய்ய இன்று முதல் டிசம்பர் வரை அதிகாரிகள் குழு பயணிக்கிறது. தமிழகத்தில் திட்ட அனுமதி இல்லாத பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கான கட்டிடங்களை கட்டுவதற்கு நகர ஊரமைப்பு இயக்குனரகத்தில் அனுமதி பெற வேண்டும். இப்படி கட்டப்படும் கட்டிடங்களுக்கு அனுமதி கேட்டு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இந்த கட்டிடங்களுக்கு அனுமதி அளிப்பதற்காக நகர ஊரமைப்பு இயக்கத்தின் இணை இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு பள்ளி கட்டிட அனுமதிக்காக விண்ணப்பித்துள்ள நிறுவனங்களிடமிருந்து ஆவணங்களை பெற்று ஆய்வு செய்து அனுமதி அளிக்க உள்ளது.ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களுக்கான ஆவணங்களையும் பெற்று இக்குழு மறு ஆய்வும் மேற்கொள்ளும் .மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தப்பட உள்ளது.
அதன்படி இன்று காஞ்சிபுரம் மாவட்டம், 21ஆம் தேதி திருவள்ளூர், வேலூர் ராணிப்பேட்டை ,28ஆம் தேதி திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நவம்பர் நான்காம் தேதி நாமக்கல் ,கிருஷ்ணகிரி, தர்மபுரி, 11ஆம் தேதி கோவை, திருப்பூர்" ஈரோடு பதினெட்டாம் தேதி திருச்சி, கரூர் அரியலூர் ,25ஆம் தேதி பெரம்பலூர் புதுக்கோட்டை, திருவாரூர் , டிசம்பர் இரண்டாம் தேதி நாகை,மயிலாடுதுறை தஞ்சாவூர், 9-ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் , விருதுநகர், 16ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் , 23ஆம் தேதி விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, டிசம்பர் 30ஆம் தேதி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ,கன்னியாகுமரி மாவட்டங்களில் குழு ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த நாட்களில் பள்ளி நிர்வாகத்தினர் நகர ஊரமைப்பு குழுவினரிடம் பள்ளி கட்டிடம் தொடர்பான ஆவணங்களை காட்டி அனுமதி பெறலாம்.