Kathir News
Begin typing your search above and press return to search.

திரிபுரா : பக்ரீத் அன்று ஊரடங்கைத் திரும்பப் பெறும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புலம்பல்.!

கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு 'குறிப்பிட்ட சமூகத்தின்' மத விழாபோது ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது பொறுப்பற்றதன்மை என்று கூறியுள்ளது.

திரிபுரா : பக்ரீத் அன்று ஊரடங்கைத் திரும்பப் பெறும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புலம்பல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 3:00 AM GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரிபுரா மாநிலத்தில் உள்ள பாஜக அரசை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று ஊரடங்கைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது என அந்தக் கட்சியின் ஊதுகுழல் ஆன 'டெஸெர் கதா' பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. முஸ்லிம்கள் அன்று பக்ரீத் கொண்டாடுவது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

தகவல்களின்படி, மார்க்சிஸ்ட் கட்சி திரிபுரா மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசாங்கத்தை IPC சட்டத்தின் கீழ் வரும் 144 தடை உத்தரவையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தடை உத்தரவின் கீழ் ஐந்து மற்றும் ஐந்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்று சேர முடியாது. இச்சட்டத்தை திரும்பப் பெறுவதன் மூலம் பக்ரீத் முஸ்லிம்கள் எளிதாக கொண்டாட முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுவதே இதற்குக் காரணமாகும்.

அந்தக் கட்சியின் ஊது குழல் பத்திரிக்கை மேலும் கூறுகையில் கொரானா வைரஸை கட்டுப்படுத்துகிறோம் என்ற சாக்கில் மாநில அரசு மக்களின் உரிமைகள், தனி சுதந்திரம், போராட்டம் செய்யும் உரிமை, வித்தியாசமான கருத்துக்களை கூறும் உரிமை ஆகியவற்றை பறிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளது.

தகவல்களின்படி திரிபுரா அரசாங்கம் ஜூலை 27ஆம் தேதி அன்று ஒரு முழு ஊரடங்கு மாநிலத்தில் அமல்படுத்தி பின்னர் அது ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நீட்டித்தது. பக்ரீத் அன்று ஊரடங்கு தளர்வு செய்ய வேண்டும் என்ற என்ற தங்கள் கோரிக்கையை நியாயப்படுத்தும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சி, ஊரடங்கு மக்களின் நிதிச்சுமையை அதிகரித்துள்ளதாகவும் உழைக்கும் வர்க்கத்தை பாதித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கின் காரணமாக திரிபுரா அரசாங்கம் மக்களை வீட்டுக் காவலில் இருக்கும் அளவுக்கு கட்டாயப்படுத்துகிறது என்றும் குற்றம் சுமத்தியுள்ளது.





பக்ரித் என்று அந்த பண்டிகையைக் குறிப்பிட்டு கூறாமல் அரசாங்கத்தை குற்றம் சுமத்தி உள்ள கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு 'குறிப்பிட்ட சமூகத்தின்' மத விழாக்களின்போது ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது பொறுப்பற்ற தன்மை என்றும் இதற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி அந்த 'குறிப்பிட்ட சமூகத்தை' சமூகவிலகலைக் கடைபிடித்தும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பண்டிகையைக் கொண்டாடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஊரடங்கைத் திரும்பப் பெற்று அந்த 'குறிப்பிட்ட சமூகத்தை' அவர்களுடைய பண்டிகையை நிம்மதியாக கொண்டாட விடும்படியும் மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

http://www.dailydesherkatha.net/imageview_12925_17218591_4_71_31-07-2020_1_i_1_sf.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News