Kathir News
Begin typing your search above and press return to search.

அம்பானி அதானிக்காக மோடி அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் - காங்கிரஸ் யாருக்காக செயல்பட்டது என்று பொதுமக்கள் கேள்வி!

மத்திய பாஜக அரசு அம்பானி அதானி போன்ற பெரும் பணக்காரர்களுக்காகவே செயல்படுகிறது என்று தொடர்ந்து காங்கிரஸ் குற்றம் சாட்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி யாருக்காக செயல்பட்டது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அம்பானி அதானிக்காக மோடி அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் - காங்கிரஸ் யாருக்காக செயல்பட்டது என்று பொதுமக்கள் கேள்வி!
X

KarthigaBy : Karthiga

  |  27 May 2024 11:49 AM GMT

அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக மட்டுமே மோடி அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை ராகுல் காந்தி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பேசிவருகிறார். அதானியுடனான தொடர்பு குறித்து காங்கிரஸ் கட்சி 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை பிரதமர் மோடியை நோக்கி எழுப்பியிருக்கிறது. அவற்றில் ஒரு கேள்விக்குக்கூட பிரதமர் மோடி பதிலளித்ததில்லை.

ஆனால், இப்போது தேர்தல் பிரசாரத்தில் அந்த விவகாரத்தை காங்கிரஸுக்கு எதிராக கையிலெடுத்திருக்கிறார் பிரதமர் மோடி. தெலங்கானா மாநிலம் பிரசாரத்தின்போது, ‘அதானி, அம்பானி குறித்து தொடர்ந்து பேசிவந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏன் அது பற்றி பேசுவதில்லை?’ என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். அதைவிட, ‘அதானியிடமும், அம்பானியிடமும் ராகுல் காந்தி பணம் வாங்கிவிட்டாரா?’ என்று பிரதமர் மோடி கேட்டது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அம்பானி, அதானி ஆகியோரை விமர்சனம் செய்வதை ராகுல் காந்தி ஏன் நிறுத்தினார் என்று பிரதமர் மோடி தனது உரையில் கேள்வி எழுப்பி உள்ளார்.பிரதமர் மோடி தனது பேச்சில், "கடந்த ஐந்தாண்டுகளாக காங்கிரஸின் இளவரசர், காலையில் எழுந்தவுடன் அம்பானி, அதானி என்று கோஷமிட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரஃபேல் விவகாரம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக, அவர் அம்பானி அதானி என்று கோஷமிட்டார். அம்பானி-அதானி, அம்பானி-அதானி என்று மீண்டும் மீண்டும் ராகுல் காந்தி சொல்ல ஆரம்பித்தார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அம்பானி-அதானியை பேசுவதை அவர் நிறுத்திவிட்டார்.

நோட்டுகள் நிரப்பப்பட்ட டெம்போ காங்கிரசுக்கு வந்துவிட்டதா? அம்பானி-அதானியை பற்றி பேசுவதை இரவோடு இரவாக நிறுத்திவிட்டீர்கள் என்றால் என்ன ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சொல்லுங்கள். உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் டீலிங் என்ன?.ஐந்து வருடங்களாக அம்பானி-அதானியை துஷ்பிரயோகம் செய்து ஒரே இரவில் நிறுத்திவிட்டீர்கள். அப்படி என்றால் உங்களுக்கும் அம்பானி - அதானிக்கும் இடையில் ஏதோ இருக்கிறது. இதற்கு நீங்கள் நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளால் பலன் அடைந்த மக்களும் காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங்குடன் அம்பானி இருந்த புகைப்படம் ராகுல் காந்தியுடன் அம்பானி,அதானி இருந்த புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு மோடி அரசு அம்பானி அதானிக்காக செயல்படுகிறது என்றால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் யாருக்காக வேலை செய்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.


SOURCE :Hindutamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News