Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ், சோனியாவின் குடும்ப கம்பெனி ஆனது! ராபர்ட் வாத்ராவுக்கு விரைவில் பதவி!!

காங்கிரஸ், சோனியாவின் குடும்ப கம்பெனி ஆனது! ராபர்ட் வாத்ராவுக்கு விரைவில் பதவி!!

காங்கிரஸ், சோனியாவின் குடும்ப கம்பெனி ஆனது! ராபர்ட் வாத்ராவுக்கு விரைவில் பதவி!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Aug 2019 12:39 PM GMT



ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா, காங்., கட்சியின் இடைக்கால தலைவர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டுள்ள பேனரில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் படம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ராபர்ட் வாத்ராவுக்கும் விரைவில் காங்கிரஸ்சில் பதவி வழங்கப்பட உள்ளது என்று மூத்த காங்கிரஸ் தவைவர் ஒருவர் தெரிவித்தார்.


பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற படுதோல்விக்கு பொறுப்பேற்று ராகுல், கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து நாடகத்தை தொடங்கி வைத்தார். அதோடு சோனியா குடும்பத்தை சேராத ஒருவர்தான் தலைவராக நியமிக்கப்படுவார் என்று அறித்தார்.





ராகுல் கூறியதால் சோனியா குடும்பத்தை சேராத ஒருவர்தான் கட்சி தலைவர் ஆக நியமிக்கப்பட உள்ளார் என அனைவரும் எதிர்பார்த்தனர். இப்படியே நாட்களை நகர்த்தினர்.


இந்த நிலையில், சோனியாவே மீண்டும் காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அவரை வாழ்த்தி டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், சோனியா, ராகுல், பிரியங்கா, சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா ஆகியோர் படங்கள் இடம்பெற்றுள்ளன.


இந்த பேனர்களில் வேறு எந்த தலைவர்களின் படங்களும் இல்லை. அதாவது காங்கிரஸ் கட்சி, சோனியாவின் குடும்ப கம்பெனி ஆகிவிட்டது.


சோனியா தலைவர், பிரியங்கா பொது செயலாளர், ராகுல்தான் காங்கிரசின் முடிவெடுக்கும் தலைவர். இந்த நிலையில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு அடுத்த முக்கிய பதவி வழங்குவதற்கு வசதியாக இப்போதே அவரது படத்தை பேனர்களில் இடம்பெற செய்துள்ளனர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


எது எப்படியோ, தி.மு.கவைப் போன்றே, காங்கிரசும் குடும்பமே கட்சி என்பதில் தெளிவாக உள்ளது. காங்கிரசின் வாரிசு பட்டியலில் புதிதாக ராபர்ட் வாத்ராவும் இணைந்துள்ளார் என்பது தற்போதைய புதுவரவு.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News