"காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், பதவி வெறி பிடித்து அலைகின்றன" - பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!
"காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், பதவி வெறி பிடித்து அலைகின்றன" - பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!
By : Kathir Webdesk
ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு வரும் 30-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. டால் தோன்கஞ்சியில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஊழல் செய்வது கொள்ளையடிப்பது போன்றவற்றை மட்டுமே செய்து வந்தது.
ஆனால் பாஜக ஆட்சி அமைந்த பிறகு தான், நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி அமைந்தால், அது மாநில மக்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை எல்லாம் மாநில அரசு நிறைவேற்றி அதன் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள். உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் நீங்கள் இதை பார்க்க முடியும். ஆனால் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள், மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த மறுக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான்.
காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், பதவி வெறி பிடித்து அலைகின்றன. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக துடிக்கின்றன. அவர்கள் மக்கள் மீதான அக்கறையால் பதவியைக் கைப்பற்ற முயலவில்லை. தங்களின் சுய லாபத்துக்காக, சுயநலத்துக்காக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கின்றனர்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.