காங்கிரஸின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் போய்விட்டது - ஜோதிராதித்ய சிந்தியா.! #Congress #Jyotiradityascindia #BJP
காங்கிரஸின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் போய்விட்டது - ஜோதிராதித்ய சிந்தியா.! #Congress #Jyotiradityascindia #BJP

"காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 15 மாதங்களில் முதல்வர் அலுவலகத்தில் ஊழல் அரசை நடத்தினார்கள். துறைகளை ஒதுக்கீடு செய்வது குறித்து மட்டுமே கவலைப்பட்டனர். கொரோனா நெருக்கடியின் போது கமல்நாத்தும், திக்விஜய் சிங்கும் பொது நலனுக்கு பாடுபடாமல், அரசியல் செய்வதிலேயே ஆர்வம் காட்டினர். கடந்த 90 நாட்களாக அமைதியாக இருந்த நிலையில், அவர்களிடம் இருந்து உரிய பதிலைப் பெறுவதற்காக மீண்டும் களத்தில் இறங்கியுள்ளதாகவும்" அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மத்தியபிரதேச முன்னாள் துணை முதல்வருமான ஜோதிராதித்ய சிந்தியா கடந்த மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார். கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் மத்திபிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்து, பாஜக ஆட்சிக்கு வந்தது என்பது குறிப்பிடதக்கது.