Kathir News
Begin typing your search above and press return to search.

'காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை என்னை 91 முறை அவதூறாக பேசி உள்ளனர் ' - பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கடும் தாக்கு

காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை என்னை 91 முறை அவதூறாக பேசி உள்ளனர் என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார்.

காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை என்னை 91 முறை அவதூறாக பேசி உள்ளனர்  - பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கடும் தாக்கு

KarthigaBy : Karthiga

  |  30 April 2023 2:30 PM GMT

கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி முதல் முறையாக நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். டெல்லியில் இருந்த விமான மூலம் பீதருக்கு வந்த பிரதமர் மோடி, உம்னாபாத்தில் சிலகேரி பகுதியில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார் .இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-


சாமானிய மக்களின் பிரச்சினைகளை பேசுகிறவர்களை, ஊழல்களை வெளியே கொண்டு வருகிறவர்களை, அவர்களின் சுயநல கொள்கைகளை விமர்சிப்பவர்களை, காங்கிரஸ் வெறுக்கிறது. காங்கிரஸின் இந்த வெறுப்பு தொடர்ந்து நிரந்தரமாக இருந்து வருகிறது . இந்த தேர்தலிலும் காங்கிரஸ் மீண்டும் என்னை பற்றி விமர்சிக்க தொடங்கியுள்ளது .எனக்கு எதிராக தனிப்பட்ட முறையில் காங்கிரசின் இந்த விமர்சனங்களை யாரோ ஒருவர் பட்டியலிட்டு எனக்கு அனுப்பி வைத்துள்ளார்.


இதுவரை காங்கிரஸ் தலைவர்கள் என்னை 91 முறை பல்வேறு விதமாக அவதூறாக பேசி உள்ளனர் . காங்கிரஸார் என்னை பற்றி தவறாக பேசுவதை விட்டுவிட்டு நல்லாட்சி நடத்துவதிலும் தங்கள் கட்சி தொண்டர்களுக்கு தார்மீக ஊக்கத்தை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தி இருந்தால் அந்தக் கட்சிக்கு இந்த மோசமான நிலையை ஏற்பட்டிருக்காது. மக்களுக்கு நாட்டிற்கும் நல்லது செய்கிறவர்களை அவமதிப்பது தான் காங்கிரஸின் வரலாறு .என்னை மட்டும் அவர்களை அவமதிக்கவில்லை .கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 'சவுகிதார் சோர்ஹை' ( காவலனே ஒரு திருடன்) எந்த விமர்சித்தனர் அதைத்தொடர்ந்து அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களை திருடர்கள் என்று கூறினார்.


தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறும் நேரத்தில் நமது லிங்காயத் சகோதர சகோதரிகளை திருடர்கள் என்று காங்கிரஸார் சொல்கிறார்கள். காங்கிரஸ் ஒருவரை தவறாக பேசும் போது அவர்களுக்கு நிற்க முடியாத அளவுக்கு மக்கள் தக்க தண்டனையை வழங்கியுள்ளனர் என்பதை அந்தக்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரி உங்களை தவறாக பேசிய காங்கிரசாருக்கு ஓட்டுகள் மூலமாகவும் தக்க பாடம் புகட்ட மக்கள் முடிவு செய்துள்ளனர் .


காங்கிரஸார் அம்பேத்கர், வீரசாவர்க்கர் வரிசையில் என்னையும் தவறாக பேசுகிறார்கள். இதை நான் எனக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன். காங்கிரசார் என்னை தவறாக பேசட்டும். ஆனால் நான் தொடர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவேன். நிலையான தனி பெரும்பான்மையுடன் கூடிய பா.ஜனதா அரசு அமைய மக்கள் வாக்களிக்க வேண்டும் .இந்த முறை உங்களின் முடிவு பெரும்பான்மையுடன் கூடிய பா ஜனதா அரசு அமைவதாக இருக்கட்டும்.


நாட்டை காங்கிரஸ் பிளவுபடுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கவரும் அரசியலை தான் காங்கிரஸ் செய்கிறது. வறுமை என்பது தெரியாததால் காங்கிரஸால் ஏழைகளின் பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாது . நாட்டின் வளர்ச்சியில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. அந்த கட்சி முழுமையாக எதிர்மறையுடன் செயல்படுகிறது. கர்நாடகா நிலையற்ற கூட்டணி ஆட்சியால் பாதிக்கப்பட்டது. நிலையற்ற அரசால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது .இவ்வாறு மோடி பேசினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News