பீகார் வெள்ளத்தை விமர்சிக்க தவறான புகைப்படங்களைப் பகிர்ந்த காங்கிரஸ் - நெட்டிசன்களிடம் அடி உதை வாங்காத குறை தான்.!
பீகார் வெள்ளத்தை விமர்சிக்க தவறான புகைப்படங்களைப் பகிர்ந்த காங்கிரஸ் - நெட்டிசன்களிடம் அடி உதை வாங்காத குறை தான்.!

மேற்கு வங்கத்திலிருந்து பீகாரில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக படங்களை காங்கிரஸ் பகிர்ந்து கொள்கிறது.
பீகாரில் சில பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நேரத்தில் சில அரசியல் கட்சிக்காரர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். நிதீஷ்குமார் தலைமையிலான அரசாங்கத்தை தாக்கும் அவசரத்தில் பீகார் காங்கிரஸ், வெள்ளியன்று மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சில பகுதிகளான முசாபர்பூர் , பீகார் ஷெரீப், பாகல்பூர் மற்றும் பாட்னா போன்ற படத்தை பதிவிட முயன்றது.
"நிதிஷ்குமாரின் நல்லாட்சியில் பீகார் இப்போது தண்ணீரில் மிதக்கிறது. முசாபர்பூர், பாகல்பூர், பீகார் மற்றும் பாட்னா நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் இப்பொழுது மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளன" என்று பீகார் காங்கிரஸ் டிவிட்டரில் கூறியது. வெள்ளம் நிறைந்த பகுதியில் ஒரு பெண் நடந்து செல்வதையும் பகிர்ந்துள்ளனர்.
ஆனால் அந்த படத்தில் உள்ள காரின் நம்பர் பிளேட்டில் மேற்குவங்க பதிவு உள்ளது. இருப்பினும் அது உண்மையில் மேற்கு வங்கத்தில் இருந்து வந்தது என உறுதியாக கூற முடியாது. மேலும் இந்த படத்தின் தேடலில் இது வங்காளத்தை தாக்கிய ஆம்பான் சூறாவளியின் போது எடுத்த படம் என காட்டுகிறது. பீகாரில் காங்கிரஸ் பகிர்ந்துள்ள இந்தப் படம் இந்த ஆண்டு மே மாதம் மேற்கு வங்கத்தில் ஆம்பான் சூறாவளியின் போது எடுத்த படம் என்று தெரியவருகிறது. இதேபோல் 2013 இல் ஏற்பட்ட வெள்ள படத்தையும் காங்கிரஸ் பயன்படுத்தியது.
காங்கிரஸ் கட்சி பரப்பிய வதந்தி.
இதுபோன்ற பொய்யான போலி படங்களை வெளியிடுவதை காங்கிரஸ் கட்சி பலமுறை செய்துள்ளது. பங்களாதேஷைச் சேர்ந்த ஒரு ரோஹிங்கியா அகதியின் பழைய படத்தை அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் தலித் பிரிவு, மோடி அரசை இந்த மக்களின் நிர்கதியற்ற முகங்களைப் பார்த்தாவது அவர்களுக்கு உதவ ஏதாவது செய்யவேண்டும் என்று விமர்சித்து பதிவிட்டது.
கடந்த ஆண்டு மாநில சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடியையும் மனோகர்லால் கட்டார் தலைமையிலான அரசாங்கத்தையும் விமர்சிக்க இளைஞர் காங்கிரஸ் பாகிஸ்தானிலிருந்து எடுக்கப்பட்ட பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலாவும் ஏழைகளின் துயரங்களூல் அரசியல் செற்யும் விதமாக நேபாளத்தில் இருந்து இந்தியாவை போன்ற ஒரு படத்தை பகிர்ந்து கொண்டார்.
source : https://www.opindia.com/2020/08/congress-bihar-west-bengal-amphan-images-floods-fact-check/amp/?__twitter_impression=true