Kathir News
Begin typing your search above and press return to search.

"உங்கள்" நாட்டை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று பதிவிட்ட காங்கிரஸ் கட்சி : அப்படி என்றால் இந்தியா நம் நாடு இல்லையா ? கொதித்து எழும் நெட்டிசன்கள்

"உங்கள்" நாட்டை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று பதிவிட்ட காங்கிரஸ் கட்சி : அப்படி என்றால் இந்தியா நம் நாடு இல்லையா ? கொதித்து எழும் நெட்டிசன்கள்

உங்கள் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று பதிவிட்ட காங்கிரஸ் கட்சி : அப்படி என்றால் இந்தியா நம் நாடு இல்லையா ? கொதித்து எழும் நெட்டிசன்கள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Aug 2019 2:08 PM GMT


உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சிந்து.


சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-5’ வீராங்கனையான இந்தியாவின் சிந்து, 4வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஒகுஹராவை சந்தித்தார்.


முதல் செட்டை 21-7 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டை 21-7 என தன்வசப்படுத்தினார்.
மொத்தம் 36 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.


இது தவிர, உலக பாட்மின்டனில் சிந்து கைப்பற்றிய 5வது பதக்கம். ஏற்கனவே 2 வெள்ளி (2017, 2018), 2 வெண்கலம் (2013, 2014) வென்றிருந்தார்.


இது தொடர்பாக, பி.வி. சிந்துவை பாராட்டும் விதமாக ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சி, "உங்கள்" நாட்டை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று பதிவிட்டிருந்தது. இதனை அடுத்து நெட்டிசன்கள் கொதித்தெழுந்து பதிவிட்டு வருகின்றனர்.




https://twitter.com/masakadzas/status/1165622040562425856?s=19




https://twitter.com/hariaiyer/status/1165623066564497409?s=19




https://twitter.com/iabhi_sinha/status/1165620636124762112?s=19




https://twitter.com/BhagyeshVikani/status/1165621367091253249?s=19

Next Story
கதிர் தொகுப்பு
Trending News