'காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் நாட்டைத் துண்டாக்கும் பின்னோக்கிய சிந்தனைகளே தெரிகிறது- கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ஒரு பொய் மூட்டை என்றும் அதில் நாட்டைத் துண்டாக்கும் பின்னோக்கிய பிளவு வாத முயற்சிகளை தெரிகிறது என்றும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
By : Karthiga
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் சிந்தனைகள் இருப்பதாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி இந்தியாவை 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதே காங்கிரஸ் நோக்கம் என்று சாடியுள்ளார். லோக்சபா தேர்தல் தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி சரமாரியாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டை என்று விமர்சித்த அவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு பக்கமும் இந்தியாவை துண்டாட முயல்கிறது என்று சாடினார்.
ராஜஸ்தானின் ஆஜ்மீரில் நேற்று நடந்த பாஜக பேரணியில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள விஷயங்கள் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்து முஸ்லிம் லீக் இன் சிந்தனைகளை ஒத்திருப்பதாக விமர்சித்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மிகக் கடுமையாக விமர்சித்த அவர் அது இந்தியாவை துண்டாடும் என்றும் சாடி உள்ளார். பிரதமர் மோடி மேலும் பேசுகையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பொய் மூட்டை ஒன்றை அவிழ்த்து விட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு பக்கத்திலும் இந்தியாவை துண்டாக்கும் முயற்சிகள் தெரிகிறது.
இது சுதந்திரத்திற்கு முன் முஸ்லிம்கள் கொண்டிருந்த எண்ணங்களை பிரதிபலிக்கிறது. முஸ்லிம் லீக்கை திணிக்கவே காங்கிரஸ் விரும்புகிறது. இன்றைய இந்தியாவில் அன்றைய முஸ்லிம் லீக் சிந்தனைகளை திணிக்க முயல்கிறது .இதைத் தவிர்த்து பார்க்கும் போது அந்த தேர்தல் அறிக்கையில் எஞ்சியிருப்பது கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி சிந்தனைகள் மட்டுமே. இன்றைய காங்கிரஸ் கொள்கைகள் இல்லாமல் தடுமாறுகிறது .கட்சி எல்லாவற்றையும் செய்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. இதுபோன்ற கட்சியால் நாட்டின் பயன் கருதி எதையும் செய்ய முடியாது.
அவர்கள் இந்தியாவை கடந்த நூற்றாண்டிற்கு தள்ள விரும்புகிறார்கள் என்பது அவர்கள் தேர்தல் அறிக்கையை பார்த்தால் தெளிவாக தெரிகிறது. பெண்கள் சக்தி பற்றி காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்படவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு பெண்கள் பல தலைமுறைகளாக பாதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு காங்கிரஸ் என்ன செய்தார்கள் ?இப்படி உங்களுக்கு உதவாத காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும். கழிவறைகள் கட்டுதல் ,குழாய் நீர் என்று பெண்களுக்காக நாங்கள் பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ராணுவத்தில் இளைய பெண்களுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஆறு மாத மகப்பேறு விடுபை உறுதி செய்தோம்.
சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தோம் .சைக்கிளோட்ட முடியாத நம் கிராமங்களில் இருந்த பெண்கள் ஆளில்லா விமானங்கள் ஓட்டுகிறார்கள். பல இஸ்ரோ திட்டங்கள் இப்போது பெண்களால் கையாளப்படுகிறது. இவை அனைத்தும் ஒரு ட்ரெய்லர் தான். நாங்கள் எங்கள் நாட்டை இன்னும் முன்னோக்கி கொண்டு செல்வோம். 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே எனது இலக்கு. அதை நோக்கி பயணிப்போம். என்று அவர் தெரிவித்தார்.
SOURCE:Dinaseithi