Kathir News
Begin typing your search above and press return to search.

அரசியலமைப்புச் சட்டம் தான் என் வேதம், வழிகாட்டி - பிரதமர் மோடி!

அரசியலமைப்புச் சட்டம் தான் ஆட்சிக்கான மிகப்பெரிய வேதம் என்றும் அதுதான் தனது வழிகாட்டி என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டம் தான் என் வேதம், வழிகாட்டி - பிரதமர் மோடி!
X

KarthigaBy : Karthiga

  |  21 May 2024 4:58 PM GMT

ஒடிசாவின் தென்கனல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏராளமான வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். அனைத்து வாக்காளர்களையும் குறிப்பாக அனைத்து முதல் முறை வாக்காளர்களையும் வாக்களிக்கும் வரை கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தேர்தல் நேரத்தில் உலக வல்லுனர்கள் பலர் நாடு முழுவதும் வலம் வருகின்றனர். இந்திய வாக்காளர்களின் துடிப்பை அவர்கள் உணர்ந்துள்ளனர். மோடி அரசு மூன்றாவது முறையாக மீண்டும் கொண்டுவர மக்கள் அனைவரும் விரும்புவது அவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் நம் தாய்மார்கள் சகோதரிகள் மற்றும் இளைஞர்களிடமிருந்து ஒரு வித்தியாசமான உற்சாகத்தை காண்கிறேன். ஒடிசாவின் ஒவ்வொரு கிராமம் மற்றும் தெருவில் இருந்தும் ஒரே மாதிரியான குரல் வருகிறது.

ஒடிசாவில் முதல் முறையாக இரட்டை இயந்திர அரசு இதுதான் அந்தக் குரல். நீங்கள் 25 ஆண்டுகளாக பிஜு ஜனதா தல அரசாங்கத்தை நம்பி வருகிறீர்கள். இந்த ஆண்டுகளில் ஒடிசா மக்களுக்கு என்ன கிடைத்துள்ளது என்று ஒடிசா முழுவதும் தற்போது சுய பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது. நான் குஜராத்தில் இருந்து வந்துள்ளேன். சோமநாதரின் தேசத்தில் இருந்து ஜெகநாதரின் தேசத்துக்கு எனது வணக்கத்தை செலுத்த வந்துள்ளேன்.ஆனால் ஒடிசாவில் ஏழ்மையை காணும் போது இவ்வளவு வளமான மாநிலமாகவும் மகத்தான பாரம்பரியத்தைக் கொண்ட என் ஒடிசாவை அழித்தவர் யார் என்று என் இதயத்தில் வலி ஏற்படுகிறது.

ஊழல்வாதிகளின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ள பிஜேடி அரசுதான் இதற்கு காரணம். ஒரு சில ஊழல்வாதிகள், முதல்வர் இல்லம் மற்றும் அலுவலகத்தை கைப்பற்றியுள்ளனர். சிறு தலைவர்கள் கூட கோடிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகிவிட்டனர். பிஜேடி ஆட்சியில் ஒடிசாவின் செல்வம் பாதுகாப்பாக இல்லை. ஒடிசாவின் கலாச்சார பாரம்பரியமும் பாதுகாப்பாக இல்லை. ஜெகநாதர் கலாச்சாரத்திற்காக பல பணிகளை செய்த பத்ம விருது பெற்ற அந்தர்யாமி மிஸ்ராவின் பூமி இது. ஆனால் பிஜேடி அரசாங்கத்தின் கீழ் ஜெகநாதரின் கோயில் கூட பாதுகாப்பாக இல்லை.

பிஜேபி ஆட்சி ஒடிசாவுக்கு எதையும் வழங்கவில்லை .சிறந்த வாழ்க்கை வாழ விவசாயிகளும் இளைஞர்களும் ஆதிவாசிகளும் இன்னுமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் .ஆதிவாசி மக்கள் வாழும் இடங்கள் வளமிகு சபை. ஆனால் அவர்கள் ஏழ்மையின் பிடியில் இருக்கிறார்கள் .ஒடிசாவை அழித்தவர்களை மன்னிக்க கூடாது. நீங்கள் இங்கு பாஜகவின் ஆட்சியை அமைக்க போகிறீர்கள். ஒடிசாவின் மகன் அல்லது மகளை மட்டுமே பாஜக முதல்வராக்கும். ஒடிசாவில் ஜூன் பத்தாம் தேதி பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சியின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது .

ஏனெனில் பிஜேடி அரசு விலகுவது உறுதி .21ஆம் நூற்றாண்டின் ஒடிசாவுக்கு வளர்ச்சி வேகம் தேவை. பிஜேபி அரசாங்கம் எந்த சூழ்நிலையிலும் வேகமாக வளர்ச்சியை கொடுக்க முடியாது .பிஜேடின் தொடர்பான கொள்கைகள் தளர்வான வேலைகள் மற்றும் மெதுவான வேகத்தை விட்டுவிட்டு பாஜகவின் வேகமான அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம வந்துவிட்டது. என்னை பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டமே ஆட்சிக்கான மிகப்பெரிய வேதம். அரசியல்வாதியாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் எனக்கு அரசியல் சட்டம் தான் வழிகாட்டி என தெரிவித்தார்.


SOURCE :Dinaboomi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News