Kathir News
Begin typing your search above and press return to search.

பாம்பனில் 250 கோடி ரூபாய் செலவில் புதிய ரெயில் பாலம் கட்டும் பூமி பூஜையுடன் இன்று தொடங்கின!

பாம்பனில் 250 கோடி ரூபாய் செலவில் புதிய ரெயில் பாலம் கட்டும் பூமி பூஜையுடன் இன்று தொடங்கின!

பாம்பனில் 250 கோடி ரூபாய் செலவில் புதிய ரெயில் பாலம் கட்டும் பூமி பூஜையுடன் இன்று தொடங்கின!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Nov 2019 4:17 PM IST


ராமேஸ்வரம் அருகே பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்று இன்று முதல் பணிகள் துவங்கப்பட உள்ளன. மண்டபம் நிலப்பகுதியையும் ராமேஸ்வரம் தீவு பகுதியையும் இணைக்கும் விதமாக கடந்த 1914-ம் ஆண்டு பாம்பனில் கடல் மீது 2 கி.மீ. நீளத்துக்கு கட்டப்பட்ட ரெயில் பாலத்தின் வழியாக 105 ஆண்டுகளாக போக்குவரத்து நடந்து வருகிறது.கடந்த ஜனவரி மாதம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் நரேந்திர மோடி பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என அறிவித்தார்.


கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார் ,அதனைத் தொடர்ந்து ரெயில்வே அமைச்சகத்தின் மூலம் பாம்பன் கடலில் மண் ஆய்வும் நடைபெற்றது.



250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த பாலம் 101 தூண்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குஜராத்தைச் சேர்ந்த ரஞ்சித் பில்டர்ஸ் என்ற நிறுவனம் பாலம் கட்டும் பணியை மேற்கொள்கிறது,பழைய பாலம் போன்றே கப்பல்கள் வந்தால் திறந்து மூடும் வகையில் அமைக்கப்படவுள்ள இன்று காலை 10 மணியளவில் அடிக்கல் நாட்டி, பூமி பூஜையானது நடைபெற்றது.


இந்த பூஜையின் போது இந்திய ரயில்வேயின் ஆய்வு குழுவினர் மற்றும் முதன்மை பொறியாளரும், தனியார் கட்டுமான அதிகாரிகளும் பூஜையில் கலந்து கொண்டனர். பூஜையை தொடர்ந்து பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. மேலும் 2 ஆண்டுகளுக்குள் புதிய பாலம் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News