கிறிஸ்துவ மதம் மாற மறுத்ததால், புற்று நோயால் இறந்த தாயாரின் சலுகைகள் தர மறுப்பு!
மதம் மாற மறுத்த காரணத்திற்காக புற்றுநோயால் இறந்த தாயாரின் சலுகைகளை தர மறுத்த நிறுவனம்.
By : Bharathi Latha
கேரளாவில் அமைந்துள்ள மூணாறில் தனியார் தேயிலை கம்பெனி நிர்வாகம் ஒன்று தன்னுடைய ஊழியரான ஒருவருக்கு மதம் மாற மறுத்த காரணத்துக்காக சலுகைகளை தர மறுத்துள்ளது. மேலும் சலுகைகளை தன்னுடைய புற்றுநோயால் இறந்த தாய்க்கு சேர வேண்டிய ஓய்வூதிய சலுகைகள் மதம் மாற இந்த காரணத்திற்காக நிர்வாகம் தர மறுப்பதாக அவருடைய மகன் கோபி கேரள முதல்வர், அமைச்சர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் மனுதாரர் கூறியிருப்பதாவது என்னுடைய தாயார் தோட்ட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ஆனால் 2019 நவம்பரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவரால் தொடர்ந்து அங்கு பார்க்க முடியவில்லை. தொற்றுநோய் பாதிப்பு 2020 டிசம்பர் 13, ஆனால் இவருடைய செலவிற்காக 12 லட்சம் ரூபாய் தான் கடன் வாங்கி இருப்பதாகவும் 34 ஆண்டுகள் பணி செய்து இருக்கும்பொழுது இழந்த என் தாயாரின் ஓய்வூதியம் வேண்டி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தோட்ட நிர்வாகம் சார்பில் குடும்பத்தினர் முழுவதும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் அப்போதுதான் ஓய்வூதியப் பணம் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்துவ மதத்திற்கு அனைவரும் மாற மறுத்ததால், எஸ்டேட் நிர்வாகம் வாரிசுகளுக்கு சேர வேண்டிய சலுகைகளை மறுத்து வருகிறது. இந்திய ஸ்டேட் புற்று நோயால் பாதித்த தொழிலாளி ஒருவரின் குடும்பத்திற்கு மதம் மாற மறுத்த காரணத்திற்காக சலுகைகளை தர மறுத்தது குறித்து அங்கு தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் ஜூன் 25இல் மூணாறில் உள்ள கம்பெனியின் தலைமை அலுவலகம் முன்பு இவர்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று போராட்டம் நடத்தி உள்ளார்கள்.
Input & Image courtesy: Dinamalar News