டெல்லி இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா உறுதியானது ..
டெல்லி இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா உறுதியானது ..

டில்லியில் தப்லீக் ஜமாத்' என்ற, இஸ்லாமிய பிரசார குழு சார்பில், டில்லியில், மார்ச், 21 முதல் மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க டில்லி சென்று வந்த அனைவரும், அவர்களது குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ளும்படி, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், விழுப்புரத்திலிருந்து புதுதில்லியில் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட நான்கு பேர் கரோனா சந்தேகத்தின்பேரில் நேற்று திங்கள்கிழமை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களது ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில் மூன்று பேருக்கு கரோனா உறுதியானதாக சுகாதாரத் துறையினர் செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விழுப்புரத்தில் பரபரப்பும், அச்சமும் நிலவி வருகிறது.