Kathir News
Begin typing your search above and press return to search.

தனிச்சிருங்க, விழிச்சிருங்க, விசிலடிச்சான் புள்ளிங்கோ - கருணாஸ் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்

தனிச்சிருங்க, விழிச்சிருங்க, விசிலடிச்சான் புள்ளிங்கோ - கருணாஸ் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்

தனிச்சிருங்க, விழிச்சிருங்க, விசிலடிச்சான் புள்ளிங்கோ - கருணாஸ் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 10:33 AM GMT

கொரோனா பரவலைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனிச்சிருங்க விழிச்சிருங்க விசிலடிச்சான் புள்ளிங்கோ, ஊரடங்கு உட்காருங்க வீட்டிலேயே புள்ளிங்கோ, கொள்ளை நோயி கொரோனா, குரல்வளையை கவ்வுது, கொத்துக்கொத்தா மக்கள் எல்லாம் மண்ணுக்குள்ள மடியுது, கூட்டம் போட்டு கூடாத கூத்தடிக்க போகாத தொற்று நோய் கொரோனா கெத்து காட்டி ஆடுது, அரசு சொல்வதை கேளுங்கள், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அள்ளிக் கொடுங்கள்!

சாக்கு போக்கு சொல்லி கிட்டு ஊர் சுத்தாத, போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டு முட்டி போடாத, அட டாப்பு டக்கரு அமெரிக்கா ஆடி கெடக்குது, குடும்ப உசுர காப்பாத்தி வீட்டில் இருங்க என்று தனித்து இருப்பதின் அவசியமும், கை கழுவ வேண்டியதன் அவசியமும், தேவையில்லாமல் வெளியே செல்லக் கூடாது, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News