Kathir News
Begin typing your search above and press return to search.

டோக்கியோவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வு : ஒலிம்பிக் போட்டிகள் தொடருமா??

Corona updates on Japan

டோக்கியோவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வு :  ஒலிம்பிக் போட்டிகள் தொடருமா??
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 July 2021 1:28 PM GMT

தற்போது கொரோனா தொற்றுகளுக்கு இடையில் தான் ஜப்பானின் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன இருந்தாலும், தற்போது அங்கு தொற்றுக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பாதிப்புகளில் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவது அங்கு இருக்கும் ஜப்பானிய மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் 3,177 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


டோக்கியோவில் பல எதிர்ப்புகளுக்கும், அதிருப்திகளுக்கும் இடையே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரே நாளில் டோக்கியோவில் மட்டும் 3,177 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதில் போட்டி அமைப்பாளர்கள் அச்சமடைந்துள்ளனர். அங்கு பெருந்தொற்று தொடங்கிய பிறகு ஒரே நாளில் கொரோனா எண்ணிக்கை 3,000த்தை தொட்டிருப்பது இப்போதுதான். புதனன்று 3,000 கொரோனா பாதிப்புகள் புதிதாக ஏற்பட்டதால் டோக்கியோவில் மருத்துவமனைகளில் நெருக்கடி அதிகரித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு 169 ஆக அதிகரித்துள்ளது. இதில் வீரர்கள், அதிகாரிகள், நிர்வாகிகளும் அடங்குவர். இந்த ஒலிம்பிக் போட்டிகளே அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் கொரோனா பாதிப்பு 2வது நாளாக அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து அச்சம்தான் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2,848 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,177 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Input from: https://www.abc.net.au/news/2021-07-29/delta-coronavirus-fuels-tokyo-surge-during-olympics/

Image courtesy: ABC News


Next Story
கதிர் தொகுப்பு
Trending News