கொரோனா தடுப்பு மேலாண்மை கூட்டம்: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் உட்பட உலக நாடுகள் புகழாரம்.!
கொரோனா தடுப்பு மேலாண்மை கூட்டம்: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் உட்பட உலக நாடுகள் புகழாரம்.!
By : Kathir Webdesk
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளே அதிகளவு அண்டை நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சர்வதேச மக்களுக்கு இந்தியாவில் இருந்து 2.29 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் வினியோகிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா மேலாண்மை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், மொரீசியஸ், நேபாளம், பாகிஸ்தான், செசல்ஸ் மற்றும் இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகள் கலந்து கொண்டது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு என்றே சிறப்பு விசா திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதனால் அவசரகால சூழலில் நமது நாட்டின் வேண்டுகோளுக்கு ஏற்ப அண்டை நாடுகளுக்கு அவர்கள் எளிதில் பயணம் செய்ய முடியும். மேலும், கொரோனா தடுப்பூசிகளின் திறன்பற்றி அறிந்து கொள்ள மண்டல தளத்தினை உருவாக்க வேண்டும்.
பெருந்தொற்றுகளை முன்கூட்டியே கண்டுப்பிடிக்க, தொழில்நுட்ப உதவியுடன் ஒரு மண்டல நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி பேசிய அனைத்து கருத்துக்களுக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தங்களது ஆதரவு மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்து மற்ற நாடுகளுக்கு இந்தியா முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறது. அனைத்து விதமான நோய்களுக்கும் இந்தியாவில் மருந்துகள் கண்டுப்பிடிக்கப்பட்டு சாதனை பட்டியலில் இணைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.