கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் உயிரிழக்க 11 மடங்கு வாய்ப்பு குறைவு ! - அமெரிக்கா நடத்திய ஆய்வில் தகவல்!
கொரோனா தடுப்பூசிசை முழுமையாக போட்டுக்கொண்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்க 11 மடங்கு வாய்ப்பு குறைவு என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா தொற்று மற்றும் டெல்டா வைரஸால் பல்வேறு நாடுகளில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
By : Thangavelu

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் எதிரொலிக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க தொற்று நோய்த் தடுப்பு மைய இயக்குநர் ரோச்சல்லா வெலன்க்சி கூறியிருப்பதாவது: கொரோனா குறித்த ஆய்வு செய்ததில் கொரோனா தடுப்பூசிகள் சிறப்பாக வேலை செய்வது தெரியவந்துள்ளது.
கொரோனா தடுப்பூசிசை முழுவமையாக போட்டுக் கொண்டவர்கள் தொற்றால் உயிரிழப்பதற்கு 11 மடங்கு வாய்ப்பு குறைவு எனக் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar