மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு - கண்காணிப்பை தீவிர படுத்த உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்!
உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
By : Karthiga
உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது .இந்தியாவிலும் சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு அறிவுரை கூறியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேதுர பால் சிங் கூறியிருப்பதாவது:-
உருமாறிய புதிய வகை கொரோனா ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து போதிய ஆதாரங்கள் இல்லை . எனவே அதன் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்று இப்போதைக்கு மதிப்பிடப்படுகிறது .இருப்பினும் அந்தத் தொற்றால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்று கருதப்படுகிறது .குறிப்பாக குளிர்காலத்துக்குள் நுழையும் நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கருத்தில் கொண்டு இதை கணித்துள்ளோம்.
எனவே நாடுகள் அனைத்தும் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும். தரவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். வைரஸ்களின் பரிணாம வளர்ச்சியை தொடர்ந்து கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை முடிவு செய்ய வேண்டும். பொதுமக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விடுமுறை காலத்தில் பொதுமக்கள் பயணம் செய்வதும் திருவிழாவுக்கு கூடுவதும் நடப்பது வழக்கம். குளிர்காலத்தில் மக்கள் வீட்டுக்குள் பெரும்பளவு நேரத்தை கழிக்கும்போது போதிய காற்றோட்டம் இல்லாதது பல்வேறு சுவாசனங்களுக்கு வடிவத்தை விடும் .
எனவே போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதுடன் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். அதுபோல் கொரோனா மற்றும் சளி காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் மக்களை பாதுகாக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
SOURCE :DAILY THANTHI