தொற்று வேகமாக பரவுகின்றது.? தெருக்களில் நடமாட வேண்டாம்.. வீடுகளிலேயே இருங்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர்.!
தொற்று வேகமாக பரவுகின்றது.? தெருக்களில் நடமாட வேண்டாம்.. வீடுகளிலேயே இருங்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர்.!

தமிழகத்தில் இன்று 24ம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவாமல் தடுப்பதற்காக மாநிலங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அறியாமல் பலர் தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றனர்.
இந்நிலையில், இத்தாலியின் மக்கள் தொகை வெறும் ஆறு கோடி தான். ஆனால் அரசு சொல்வதை கேக்காமல் வெளியில் சுற்றியதால்தான் பல ஆயிரம் பேர் இறந்தனர்.
இது பற்றி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: இந்தியாவில் 134 கோடி மக்கள் தொகை உள்ளனர். இத்தாலியில் நடந்தது போன்று இந்தியாவில் நடந்தால் மருத்துவமனை வாசலில் நிற்பதற்கு கூட இல்லாமல் போய்விடும்.
தமிழக மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு.
ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் நடமாடிக்கொண்டே இருக்கிறார்கள்.
யாருக்காவது கொரோனா வைரஸ் இருந்தால் அடுத்தவர்களுக்கு எளிதில் பரவும். எனவே தெருக்களில் நடமாட வேண்டாம். வீடுகளில் தனிமையில் இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.