ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர்: ஜாமீன் தர மறுத்த நீதிமன்றம்!
ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதன் காரணமாக இளைஞருக்கு ஜாமீன் தர மறுத்த நீதிமன்றம்.
By : Bharathi Latha
கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் 30-ஆம் தேதி பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர். NIAவின் இந்த சோதனை பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்றது. எந்த சோதனையின் போது, ISIS என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மத்திய அரசின் உளவுத்துறை கொடுத்த தகவலின் பெயரில் பல்வேறு நபர்களையும் கைது செய்தது NIA. அதில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவரும் அண்ணாஸ் அலி என்பவரும் ஆவார்.
இவரை நீதிமன்ற உத்தரவின்படி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 15 தினங்களுக்கு இவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நவம்பர் 17ஆம் தேதி இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இவரை வெளியே விட்டால் சட்ட ஒழுங்கு பாதிப்ப ஏற்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவின் பெயரில் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி அவரை ஆஜர் படுத்தும் படியும் கேட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் தீபாவளியின் போது கோவையில கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்ததை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தீவிரவாத தொடர்புடைய பல்வேறு நபர்களும் கைது செய்யப்பட்டார்கள். சங்கத் சந்தேகத்தின் பெயரில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. இதன் காரணமாக இவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் தற்போது மறுத்து இருக்கிறது.
Input & Image courtesy: Nakkheeran News