Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் கட்சி வெளியேறுவதற்கான கவுண்ட்டவுன் ஸ்டார்ட் - பிரதமர் மோடி!

சதீஷ்காரில் நடக்கும் காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான 'கவுண்ட்டவுன்' தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி கூறினார்.

காங்கிரஸ் கட்சி வெளியேறுவதற்கான கவுண்ட்டவுன் ஸ்டார்ட் - பிரதமர் மோடி!

KarthigaBy : Karthiga

  |  14 Nov 2023 10:00 AM GMT

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஸ்காரரின் முதல் கட்ட தேர்தல் கடந்த ஏழாம் தேதி நடந்தது. இரண்டாவது கட்ட தேர்தல் 17-ஆம் தேதி நடக்கிறது. அதை ஒட்டி முங்கேலி மாவட்டத்தில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-


சதீஷ்காரில் முதல் மந்திரி பூபேஷ் பாலுக்கும் துணை முதல் மந்திரி டி.எஸ்.சிங்கிற்கும் இடையே ஆளுக்கு 2.5 ஆண்டு கால பதிவு என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை மதிக்காமல் சிங் தியோ வை கைவிட்டனர். தங்களது கட்சியின் மூத்த தலைவர்களையே கைவிடும் போது வாக்குறுதிகளை காப்பாற்றாமல் மக்களை ஏமாற்றும் என்பது நிச்சயம்.


சத்தீஸ்காரரில் தனது கதை முடியப்போகிறது என்று காங்கிரசுக்கும் புரிந்து விட்டது. முதல் மந்திரி பூபேஷ் பால் தனது தொகுதியில் தோற்றுவிடுவார் என்று டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களும் அரசியல் விமர்சகர்களும் என்னிடம் தெரிவித்தனர். எனவே காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சி மோடியை வெறுக்கிறது.


மோடியின் சாதியை கூட அவர்கள் வெறுக்க தொடங்கி விட்டனர். மோடியின் பெயரிலுள்ள ஒட்டுமொத்த இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தையும் கடந்த சில மாதங்களாக வசைப்பாடி வருகின்றனர். கோர்ட் மன்னிப்பு கேட்க சொன்ன பிறகும் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டனர். ஓ.பி.சி சமூகம் மீது எவ்வளவு வெறுப்பு வைத்துள்ளனர் என்பதற்கு இது ஒரு உதாரணம். அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமரியாதை செய்தது. அவரது அரசியலை முடிவுக்கு கொண்டு வர சதி செய்தது ஓட்டு வங்கி அரசியலுக்காகவும் சமரச அரசியலுக்காகவும் காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்யும் இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News