முகமது நபிகள் விவகாரம், வளைகுடா, தென்கிழக்கு நாடுகளுக்கு நமது நிலைப்பாடு தெரியும் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
By : Thangavelu
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்கள் நபிகள் நாயகம் பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தனர். இது இஸ்லாமியர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை உண்டாக்கியது. இதன் பின்னர் வளைகுடா நாடுகளில் சில இஸ்லாமியர்கள் இந்தியாவுக்கு எதிரான கருத்தை கூறியிருந்தனர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மக்களின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகள் பாதிக்கப்பட்டன. இது நாடுகள் வெளிப்படுத்தியது இல்லை, அதே நேரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடும் இல்லை என்பதை மற்ற நாடுகள் பாராட்டின என்று கூறினார்.
மேலும், முகமது நபிகள் கருத்துக்களில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு முற்றிலும் முரணானது. இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஏற்கனவே சர்ச்சையான கருத்துக்கு வளைகுடா நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கவலை அடைந்த நிலையில், இது அரசின் நிலைப்பாடு இல்லை என்பதை உணர்ந்து அவர்களே பாராட்டியுள்ளனர்.
எனவே அவர்கள் நம்முடன் நல்லுறவு கொண்டுள்ளனர். நாம் யார் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நமது நிலைப்பாடு இல்லை என்று கண்டிப்பாக புரியும். இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Asianetnews