Kathir News
Begin typing your search above and press return to search.

நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லையா? - விவசாயிகளுக்கு ஐகோர்ட்டு கூறிய அறிவுரை

நீதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.போராட்டம் நடத்தாமல் விவசாயத்தை மேற்கொள்ளுங்கள்-விவசாயிகளுக்கு ஐகோர்ட்டு அறிவுரை.

நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லையா? - விவசாயிகளுக்கு ஐகோர்ட்டு கூறிய அறிவுரை

KarthigaBy : Karthiga

  |  10 Aug 2022 12:15 PM GMT

நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் நீதியின் மீது விவசாயிகள் நம்பிக்கை வைக்கவேண்டும் போராட்டம் நடத்தி சிரமப்படாமல் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் முட்டத்தில் செயல்பட்டு வரும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவு படுத்தும் நோக்கில் பழங்குடியின மற்றும் கோபுராஜ புரம் கிராமங்களில் இருந்து சுமார் 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கடந்த 17 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிறுவனத்துக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் இங்கே இன்னும் இழப்பீடு வழங்காத நிலையில் விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்புக்கு இடையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்தன அதை அடுத்து அதற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் உரிய இழப்பீடு கோரி நாகூர் அருகே ஒரு மாத காலம் தொடர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் விவசாயிகள் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி தொடர் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார். அதை எதிர்த்து ஐகோர்ட்டில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேல்முறையீடு செய்தார். அதில் ஒரு மாத காலம் தொடர் போராட்டம் நடத்தப்பட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ளாமல் போராட்டத்திற்கு தனி நீதிபதி அனுமதி அளித்துள்ளதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி நீதிபதி டீ.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி நிலம் அளித்தவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அதையடுத்து நீதிபதிகள் 'இழப்பீடு கோரிய வழக்குகளின் முடிவுக்காக காத்திருக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவதில் எந்த அர்த்தமும் இல்லை இழப்பீடு கோரும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது நீதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

அதற்கு மாறாக நாள் முழுவதும் பந்தலின் கீழ் அமர்ந்து போராட்டம் நடத்திய சிரமப்படாமல் விவசாயிகள் விவசாய தொழிலை மேற்கொள்ள வேண்டும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 12-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்' என்று உத்தரவிட்டனர் .






Next Story
கதிர் தொகுப்பு
Trending News