Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சியில் அதிர்ச்சி : முகக் கவசத்தை கழட்டி செவிலியருக்கு அருகே தூக்கி வீசிய கொரோனா நோயாளிகள்

திருச்சியில் அதிர்ச்சி : முகக் கவசத்தை கழட்டி செவிலியருக்கு அருகே தூக்கி வீசிய கொரோனா நோயாளிகள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 1:43 PM GMT

டெல்லியில் நடந்த தனியார் மாநாட்டில் பங்குபெற்று கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் 36 பேர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலர் மருத்துவமனை டீன் Dr. வனிதா-வை தொடர்ப்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு அனுமதி மறுக்கப்படவே, மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறகு தங்களின் முகக்கவசத்தை கழட்டி செவிலியருக்கு அருகில் வீசியதாக மருத்துவமனை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிறகு, ஸ்ரீரங்கம் துணை கமிஷ்னர் ராமச்சந்திரனுக்கும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவுக்கும் தகவல் அனுப்பப்பட்டு அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

"நோயாளிகளுக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டு, நோயின் தீவிர தன்மை குறித்து அவர்களுக்கு எடுத்து சொல்லப்படும். மருத்துவ பணியாளர்களுக்கு ஏதேனும் தொந்தரவு நேர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளோம்", என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

பிறகு சமாதானம் பேச, த.மு.மு.க-வை சேர்ந்த அப்துல் ரஹீம் வரவழைக்கப்பட்டார். "அவர்கள் நலமுடம் இருப்பதாகவும், இது தேவை இல்லை என்று கூறியும், தங்களது முகக்கவசத்தை கழட்டி செவிலியருக்கு அருகில் வீசியுள்ளனர். நான் சமாதானம் பேசியுள்ளேன். அவர்கள் அமைதியாக இருப்பதாக கூறியுள்ளனர்", என்று அப்துல் ரஹீம் கூறியுள்ளார்.

Based on inputs from Times of India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News