எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசி: அனுமதி வழங்கிய அமெரிக்கா !
குறைந்த எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மூன்றாம் தடுப்பூசி போடலாம் என்று அனுமதி வழங்கியது அமெரிக்கா அரசு.
By : Bharathi Latha
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் மிகவும் குறைவாக இருக்கும். இதன் காரணமாகத்தான் அமெரிக்காவில் தற்போது அதிகரித்து வருகின்றது என்றும் கூறப்படுகிறது. இதனால் அரசுத் தரப்பில் முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் பொருட்டு மூன்றாம் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா முதல் அலையின் போது மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. 2வது அலையின் போது ஃபைஸர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், பாதிப்பு எனக்கு கட்டுக்குள் வந்து இருந்தது. இந்நிலையில் 3வது அலை அங்கே வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால், மக்களுக்கு மூன்றாவதாக கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து அந்நாட்டு அரசு தீவிரவமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் (FDA) தற்பொழுது அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நோய் எதிர்ப்பு மண்டலக் குறைபாடு உள்ளவர்கள் மூன்றாவது பூஸ்டர் டோஸ் செலுத்த முன்னுரிமை வழங்கப்படும் என்று FDA தெரிவித்து உள்ளது. ஆனால் மூன்றாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு செலுத்த வேண்டாம் என்று வலியுறுத்துகிறது. அதற்கு எதிராக தற்போது அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Image courtesy: wikipedia