Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவிற்கு எதிராக மூன்றாம் டோஸ் தடுப்பூசிக்கு தடை: WHO கோரிக்கை !

பெரும் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தபடும் மூன்றாம் டோஸ் தடுப்பூசி தேவையில்லை.

கொரோனாவிற்கு  எதிராக மூன்றாம் டோஸ் தடுப்பூசிக்கு தடை: WHO கோரிக்கை !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Aug 2021 1:48 PM GMT

உலகளாவிய அளவில் கொரோனா பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. எனவே இவற்றில் பாதிப்புகளில் இருந்து தப்பிப்பதற்காக தடுப்பூசி ஒன்றே தீர்வாக இருந்து வருகிறது. ஆனால் பல்வேறு நாடுகள் தங்களுடைய கையிருப்பில் அதிகமாக உள்ள தடுப்பூசிகளை தங்கள் நாட்டு மக்களுக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசியாக அல்லது பூஸ்டர் தடுப்பூசி போட உலக சுகாதார நிறுவனத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.


ஆனால் உலக சுகாதார நிறுவனம் இந்த கோரிக்கையை நிராகரித்தது. குறிப்பாக பணக்கார நாடுகள் தங்களுடைய கையிருப்பில் அதிகமாக தடுப்பூசிகளை வைத்துள்ளார். அவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடப்படாத ஏழை நாடுகளுக்கு தருவதற்கு முன் வர வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இன்னும் பல ஏழை நாடுகளில், பெரும்பாலான மக்களுக்கு மட்டுமின்றி முன்களப் பணியாளர்களுக்குக் கூட, தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட கிடைக்கவில்லை.


இதனால் ஏழை நாடுகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி 10 சதவீதத்தினருக்காவது கிடைப்பதை உறுதி செய்ய உதவும் வகையில், பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவது, கோவிட் பரவலைத் தடுப்பதில் பயன் தருமா? என்பது அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய பணக்கார நாடுகள் உதவ வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Input: https://www.firstpost.com/world/who-calls-for-moratorium-on-covid-19-vaccine-booster-shots-till-end-of-september-9864621.html

Image courtesy: first post news


Next Story
கதிர் தொகுப்பு
Trending News